இலங்கையில் தமிழர்களுக்குச் சொந்தமான நிலங்களை விடுவிக்க அதிபர் சிறிசேனா உத்தரவு  

இலங்கையில் தமிழர்களுக்குச் சொந்தமான நிலங்களை விடுவிக்குமாறு ராணுவத்திற்கு இலங்கை அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா உத்தரவு பிறப்பித்துள்ளார். 
இலங்கையில் தமிழர்களுக்குச் சொந்தமான நிலங்களை விடுவிக்க அதிபர் சிறிசேனா உத்தரவு  

கொழும்பு: இலங்கையில் தமிழர்களுக்குச் சொந்தமான நிலங்களை விடுவிக்குமாறு ராணுவத்திற்கு இலங்கை அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா உத்தரவு பிறப்பித்துள்ளார். 

இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும் ராணுவத்திற்குமிடையே ஏறக்குறைய 25 வருடங்களுக்கு மேலாக நடைபெற்று வந்த உள்நாட்டு யுத்தமானது கடந்த 2009-ஆம் ஆண்டு, புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டதுடன் முடிவுக்கு வந்தது. 

ஆனால் போரின் பொழுது இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் புலிகள் கட்டுப்பாட்டில் இருந்த தமிழர்களின் நிலங்களை ராணுவம் கைப்பற்றியது. அவ்வாறு கைப்பற்றப்பட்ட நிலப்பகுதிகள் போருக்குப் பின்பும் ராணுவத்தால் விடுவிக்கப்படவில்லை. 

அந்த நிலங்களில் ராணுவம் முகாம்களை அமைத்ததுடன் பல்வேறு தடுப்புக் காவல்களையும் ஏற்படுத்தியுள்ளது. அவ்வாறு கைப்பற்றப்பட்ட நிலங்களை விடுவிக்க வேண்டும் என்று இலங்கை கிழக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் மற்றும் வடக்கு பிராந்திய தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் உள்ளிட்ட தலைவர்கள் இலங்கை அரசுக்கு தொடர்ந்து வேண்டுகோள் விடுத்து வந்தனர். 

இந்நிலையில் இலங்கையில் தமிழர்களுக்குச் சொந்தமான நிலங்களை விடுவிக்குமாறு ராணுவத்திற்கு இலங்கை அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா உத்தரவு பிறப்பித்துள்ளார். 

புதனன்று வடக்கு பிராந்திய தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன்  உள்ளிட்ட பல்வேறு தலைவர்களுடன், இலங்கை அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா ஆலோசனை நடத்தினார். ஆலோசனையின் முடிவில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 

அதன்படி தமிழர்களின் நிலப்பகுதிகளை அக்டோபர் 31-ஆம் தேதிக்குள் முழுமையாக விடுவிக்க வேண்டும் என்று ராணுவத்திற்கு அதிபர் உத்தரவிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com