பப்புவா நியூ கினியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

பசிபிக் தீவு நாடான பப்புவா நியூ கினியாவில் உள்ள நியூ பிரிட்டன் தீவில் இன்று சக்தி வாய்ந்த நிலடுக்கம் ஏற்பட்டது. 
பப்புவா நியூ கினியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

பசிபிக் தீவு நாடான பப்புவா நியூ கினியாவில் உள்ள நியூ பிரிட்டன் தீவில் இன்று சக்தி வாய்ந்த நிலடுக்கம் ஏற்பட்டது. 

இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 7 ஆக பதிவாகி உள்ளது. கிம்பே தீவில் இருந்து கிழக்கே 125 கிலோமீட்டர் தொலைவிலும் 40 கிமீ ஆழத்திலும் இந்த நிலநடுக்கம் மையம்கொண்டிருந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அப்பகுதியில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டு சிறிது நேரத்தில் திரும்ப பெறப்பட்டது. எனினும் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து இன்னும் தகவல் வெளியாகவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com