இந்தியா-ஜப்பான் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி ஜப்பான் பயணம் 

இந்தியா-ஜப்பான் நாடுகளுக்கு இடையேயான உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி வரும் 28-ஆம் தேதி ஜப்பான் செல்ல உள்ளார். 
இந்தியா-ஜப்பான் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி ஜப்பான் பயணம் 

புது தில்லி: இந்தியா-ஜப்பான் நாடுகளுக்கு இடையேயான உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி வரும் 28-ஆம் தேதி ஜப்பான் செல்ல உள்ளார். 

இந்தியா-ஜப்பான் நாடுகளுக்கு இடையிலான உறவுகளை பலப்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் உச்சி மாநாடு நடைபெறுவது வழக்கம். இந்த மாநாட்டில் இருநாடுகளின் பிரதமர்கள் மற்றும் உயரதிகாரிகள் பங்கேற்று ஆலோசனை நடத்துவது நடைமுறையாக உள்ளது.

அந்தவகையில் கடந்த ஆண்டிற்கான உச்சி மாநாடு இந்தியாவில் குஜராத் மாநிலம், காந்தி நகரில் நடைபெற்றது. அதில் கலந்து கொள்வதற்காக ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே இந்தியா வந்திருந்தார்.

அதேபோல இந்த ஆண்டு ஜப்பானில் நடைபெறும் 13-வது உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக இரண்டு நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி வரும் 28-ம் தேதி டோக்கியோ செல்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. .
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com