ஐ.நா. மனித உரிமைகள் ஆணைய உறுப்பினராக இந்தியா தேர்வு

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் உறுப்பு நாடுகளில் ஒன்றாக இந்தியா மீண்டும் தேர்வாகியுள்ளது.

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் உறுப்பு நாடுகளில் ஒன்றாக இந்தியா மீண்டும் தேர்வாகியுள்ளது.
 193 நாடுகளை உறுப்பினர்களாக் கொண்ட ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை, ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் புதிய உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பை நியூயார்க் நகரில் வெள்ளிக்கிழமை நடத்தியது. இந்த தேர்தலில் வெற்றி பெற வேண்டுமெனில் 97 நாடுகளின் ஆதரவு தேவை. இந்நிலையில், 188 நாடுகளின் ஆதரவுடன் இந்தியா வெற்றி பெற்று, மீண்டும் உறுப்பினராகியுள்ளது.
 ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் 2019-ஆம் ஆண்டு ஜனவரி தொடங்கி 2021-ஆம் ஆண்டு டிசம்பர் இறுதி வரை, அதாவது 3 ஆண்டுகள் வரை இந்தியா உறுப்பு நாடாக இருக்கும்.
 ஆசிய நாடுகள் பிராந்தியத்தில் இருந்து இந்தியா, பஹ்ரைன், வங்கதேசம், ஃபிஜி, பிலிப்பின்ஸ் ஆகிய நாடுகளும் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளன.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com