பாகிஸ்தானில் இன்று 35 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்

பாகிஸ்தானில் ஒன்றுக்கு மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் ராஜிநாமா செய்ததால் காலியாக உள்ள 35 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஞாயிறன்று நடக்கிறது.
பாகிஸ்தானில் இன்று 35 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் ஒன்றுக்கு மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் ராஜிநாமா செய்ததால் காலியாக உள்ள 35 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஞாயிறன்று நடக்கிறது. 

பாகிஸ்தானில் கடந்த ஜூலை மாதம் நாடாளுமன்றத்துக்கும், பல்வேறு மாகாண சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் பொதுத்தேர்தல் நடத்தப்பட்டது. அந்த தேர்தல்களில் போட்டியிட்ட வேட்பாளர்கள் பலரும் ஒன்றுக்கு மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்றனர்.

அந்நாட்டின் பிரதமர் இம்ரான்கான் தான் போட்டியிட்ட 5 நாடாளுமன்ற தொகுதிகளிலும் வென்றார். இப்படி வெற்றி பெற்றவர்கள் ஒரு தொகுதியை வைத்துக்கொண்டு எஞ்சிய தொகுதிகளில் ராஜிநாமா செய்தனர்.அவ்வாறு காலியான 35 தொகுதிகளில் ஞாயிறன்று இடைத்தேர்தல் நடக்கிறது. அவற்றில் 11 தொகுதிகள் நாடாளுமன்ற தொகுதிகள் ஆகும். எஞ்சியவை மாகாண சட்டசபை தொகுதிகள் ஆகும்.

இந்த 11 நாடாளுமன்ற தொகுதிகளில் 9 தொகுதிகள் பஞ்சாப் மாகாணத்திலும், சிந்து மற்றும் கைபர் பக்துங்வா மாகாணங்களில் தலா ஒரு தொகுதியும் உள்ளன. மொத்தமுள்ள 35 தொகுதிகளில் 641 வேட்பாளர்கள் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்தனர். இறுதிக்கட்ட பரிசீலனைக்குப் பிறகு தற்போது 372 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

இடைத்தேர்தலுக்காக பாகிஸ்தானில் 5 ஆயிரத்து 193 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் 848 வாக்குச்சாவடிகள் மிகுந்த பதற்றமானவை என அறிவிக்கப்பட்டுள்ளன. 

காலை 8 மணியளவில் துவங்கிய வாக்குப் பதிவு மாலை 5 மணிவரை வாக்கு பதிவு நடைபெறும்.  வாக்குப்பதிவு முடிந்த உடனேயே ஓட்டு எண்ணிக்கை துவங்கி விடும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com