செய்தியாளர் கஷோகி கொலை விவகாரம்: குற்றவாளிகள் துருக்கியில் விசாரிக்கப்பட வேண்டும்

செய்தியாளர் ஜமால் கஷோகி படுகொலை தொடர்பாக சவூதி அரசு கைது செய்துள்ளவர்களை துருக்கியில் வைத்து விசாரணை நடத்த வேண்டும் என்று அந்த நாட்டு அதிபர்
செய்தியாளர் கஷோகி கொலை விவகாரம்: குற்றவாளிகள் துருக்கியில் விசாரிக்கப்பட வேண்டும்


செய்தியாளர் ஜமால் கஷோகி படுகொலை தொடர்பாக சவூதி அரசு கைது செய்துள்ளவர்களை துருக்கியில் வைத்து விசாரணை நடத்த வேண்டும் என்று அந்த நாட்டு அதிபர் எர்டோகன் வலியுறுத்தியுள்ளார்.
இது, இந்த விவகாரத்தில் ஏற்கெனவே துருக்கிக்கும், சவூதி அரேபியாவுக்கும் ஏற்பட்டுள்ள பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் என்று கருதப்படுகிறது.
இதுகுறித்து துருக்கி நாடாளுமன்றத்தில் ஆளும் நீதி மற்றும் வளர்ச்சிக் கட்சி எம்.பி.க்களிடையே செவ்வாய்க்கிழமை எர்டோகன் பேசியதாவது: இஸ்தான்புல் நகரிலுள்ள சவூதி துணைத் தூதரகத்துக்குச் சென்ற செய்தியாளர் ஜமால் கஷோகி படுகொலை செய்யப்பட்டது, பல நாள்களுக்கு முன்னரே திட்டமிட்டு நடத்தப்பட்ட சம்பவமாகும்.
எனினும், இந்த விவகாரத்தில் ஒரு சில தூதரக அதிகாரிகள் மீது மட்டும் பழியைப் போட்டுவிட்டு முக்கிய நபர்கள் தப்பித்துக் கொள்வதை ஒருபோதும் ஏற்க முடியாது.
இந்த படுகொலையில் தொடர்புடையவர்கள் எவ்வளவு பெரிய பதவியில் இருந்தாலும், அவர்களைக் குறித்து சவூதி அரசு வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும்.
மேலும், இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக கைது செய்யப்பட்டுள்ள 18 பேரையும், சவூதி அரசு துருக்கியிடம் ஒப்படைக்க வேண்டும்.
அவர்கள் மீது இஸ்தான்புல் நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று எர்டோகன் வலியுறுத்தினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com