இருதரப்பு உறவு குறித்து அமெரிக்க அமைச்சர்களுடன் அஜித் தோவல் பேச்சு

அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோ, அந்நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜேம்ஸ் மேட்டிஸ், தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் ஜான் பால்ட் ஆகியோருடன்
இருதரப்பு உறவு குறித்து அமெரிக்க அமைச்சர்களுடன் அஜித் தோவல் பேச்சு

அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோ, அந்நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜேம்ஸ் மேட்டிஸ், தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் ஜான் பால்ட் ஆகியோருடன் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், வெள்ளிக்கிழமை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
 இந்தியா-அமெரிக்கா இடையேயான நல்லுறவை மேலும் மேம்படுத்துவது குறித்து அவர்களுடன் அஜித் தோவல் பேச்சு நடத்தினார்.
 இரு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களும், பாதுகாப்புத் துறை அமைச்சர்களும் இந்தியாவில் கடந்த வாரம் "2+2' பேச்சுவார்த்தையில் பங்கேற்ற நிலையில், அஜித் தோவலின் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
 அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் புதிய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் பால்டுடனான தோவல் சந்திப்பு இது முதல் முறையாகும்.
 பாம்பியோ, மாட்டிஸ் ஆகியோரை கடந்த வாரம் தில்லியில் சந்தித்து தோவல் கலந்துரையாடியிருந்தார்.
 தலைநகர் வாஷிங்டனில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சந்திப்பின்போது, அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் நவ்தேஜ் சிங் சர்னாவும் அஜித் தோவலுடன் இருந்தார்.
 பல்வேறு துறைகளில் உத்தி சார்ந்த ஒத்துழைப்பை எதிர்வரும் காலங்களிலும் தொடர்வது குறித்து அவர்கள் ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், பிராந்திய மற்றும் சர்வதேச விவகாரங்கள் குறித்தும் அவர்கள் கலந்துரையாடியதாக தெரிகிறது.
 "2+2' பேச்சுவார்த்தைக்கு பிறகு பாதுகாப்பு சம்பந்தப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தம் இரு நாடுகளுக்கு இடையே கடந்த 6-ஆம் தேதி கையெழுத்தானது. இந்திய-பசிபிக் பிராந்தியத்தின் ஒருங்கிணைந்த வளர்ச்சி குறித்து இந்த பேச்சுவார்த்தையில் விவாதிக்கப்பட்டிருந்தது. "2+2' பேச்சுவார்த்தை இந்தியா-அமெரிக்கா இடையேயான நல்லுறவு மேலும் வலுப்பட்டுள்ளதாக அமெரிக்க பாதுகாப்புத் துறை மற்றும் வெளியுறவுத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com