பிலிப்பின்ஸ் புயலுக்கு 12 பேர் பலி

பிலிப்பின்ஸில் சனிக்கிழமை சக்தி வாய்ந்த புயல் தாக்கியதில் 12 பேர் உயிரிழந்தனர்.

பிலிப்பின்ஸில் சனிக்கிழமை சக்தி வாய்ந்த புயல் தாக்கியதில் 12 பேர் உயிரிழந்தனர்.
 இதுகுறித்து அதிகாரிகள் தெரிவித்ததாவது:
 பிலிப்பின்ஸின் லுúஸான் தீவில் உள்ள காகயான் மாகாணத்தை சக்திவாய்ந்த மங்குட் புயல் சூரிய உதயத்துக்கு முன்பே தாக்கியது.
 புயல் தாக்கிய போது மணிக்கு 170கி.மீ. முதல் 260 கி.மீ. வேகத்தில் காற்று வீசியது. பெருமழை பெய்ததையடுத்து, மாகாணத்தின் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு , நிலச்சரிவு ஏற்பட்டது.
 இதில், பெரும்பாலான வீடுகள் சேதமடைந்தன. பிரபல சுற்றுலா நகரமான பகியோவில் சாலைகள் துண்டிக்கப்பட்டு போக்குவரத்து முடங்கியது.
 விமான நிலையங்கள் மூடப்பட்டு 150 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. கப்பல் போக்குவரத்தும் நிறுத்திவைக்கப்பட்டது.
 தற்போதைய தகவல்களின்படி, மங்குட் புயலில் சிக்கி 12 பேர் உயிரிழந்தனர். இதில், இருவர் சிறுவர்கள். மலை நகரமான பகியோவைச் சேர்ந்த ஆறு பேரைக் காணவில்லை. அவர்களைத் தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.
 மங்குட் புயல் தாக்கத்தைத் தொடர்ந்து சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் லீயின் பிலிப்பின்ஸ் பயணம் ஒத்தி வைக்கப்பட்டது.
 பிலிப்பின்ûஸத் தாக்கிய மங்குட் புயல் தென் சீன கடல்பகுதியை நோக்கி நகருவதாக வானிலை மைய அறிவிப்புகள் தெரிவிக்கின்றன. இதையடுத்து, தெற்கு சீனா மற்றும் ஹாங்காங்கில் உஷார் நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com