தூதரகத்தின் மீது நடத்தப்பட்டது  பயங்கரவாதத் தாக்குதல்: வட கொரியா

ஸ்பெயின் நாட்டிலுள்ள தங்களது தூதரகத்தில் பிப்ரவரி மாதம் நிகழ்த்தப்பட்டது பயங்கரவாதத் தாக்குதல் என்று வட கொரியா சாடியுள்ளது.

ஸ்பெயின் நாட்டிலுள்ள தங்களது தூதரகத்தில் பிப்ரவரி மாதம் நிகழ்த்தப்பட்டது பயங்கரவாதத் தாக்குதல் என்று வட கொரியா சாடியுள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் வட கொரிய அதிபர் கிம் ஜோங்-உன் இடையிலான இரண்டாது சந்திப்பு, வியத்நாம் தலைநகர் ஹனோயில் கடந்த பிப்ரவரி மாதம் 27 மற்றும் 28-ஆம் தேதிகளில் நடைபெற்றது.
அதற்கு 5 நாள்கள் முன்னதாக, ஸ்பெயின் தலைநகர் மேட்ரிடில் உள்ள வட கொரிய தூதரகத்துக்குள் ஆயுதம் தாங்கிய கும்பல் நுழைந்து அங்கிருந்தவர்களை அடித்து உதைத்தது.
மேலும், அந்தத் தூதரகத்தில் இருந்த ஆவணங்கள், கணினிகள் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு அந்தக் கும்பல் தப்பியோடியது.
இதுகுறித்து வட கொரிய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
ஸ்பெயின் நாட்டிலுள்ள எங்களது தூதரகத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 22-ஆம் தேதி நடத்தப்பட்டது பயங்கரவாதத் தாக்குதலாகும்.
இந்தத் தாக்குதலில் வட கொரியாவுக்கு எதிரான சிறிய குழுவினரும், அமெரிக்காவின் எஃப்.பி.ஐ. உளவு அமைப்பினரும் ஈடுபட்டதாக வதந்திகள் உலவுகின்றன.
இதுகுறித்து ஸ்பெயின் அதிகாரிகள் இறுதி வரை பொறுப்புடன் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலுக்கு, வட கொரியாவிலிருந்து வெளியேறிவர்கள் அடங்கிய சியோலிமா பொதுப் பாதுகாப்பு அமைப்பு என்ற குழு பொறுப்பேற்றுள்ளது.
மெக்ஸிகோ நாட்டைச் சேர்ந்த அந்த அமைப்பின் தலைவர் அட்ரியன் ஹாங் சாங்கை அதிகாரிகள் புதன்கிழமை கைது செய்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com