எஸ்-400 விவகாரம்: துருக்கியுடனான எஃப்-35 விமானத் தயாரிப்பு திட்டம் நிறுத்திவைப்பு

ரஷியாவிடமிருந்து எஸ்-400 வான் பாதுகாப்பு ஏவுகணைகளை வாங்க துருக்கி முடிவு செய்துள்ளதையடுத்து, அந்த நாட்டுடன் இணைந்து தனது அதிநவீன எஃப்-35 ரக விமானங்களைத் தயாரிக்கும் திட்டத்தை
எஸ்-400 விவகாரம்: துருக்கியுடனான எஃப்-35 விமானத் தயாரிப்பு திட்டம் நிறுத்திவைப்பு


ரஷியாவிடமிருந்து எஸ்-400 வான் பாதுகாப்பு ஏவுகணைகளை வாங்க துருக்கி முடிவு செய்துள்ளதையடுத்து, அந்த நாட்டுடன் இணைந்து தனது அதிநவீன எஃப்-35 ரக விமானங்களைத் தயாரிக்கும் திட்டத்தை நிறுத்திவைப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
சோவியத் யூனியனை ராணுவ ரீதியில் எதிர்கொள்வதற்காக அமைக்கப்பட்ட நேட்டோ அமைப்பின் அங்கமான துருக்கி, அமெரிக்கா போன்ற பிற உறுப்பு நாடுகள் போலன்றி ரஷியாவுடன் நெருங்கிய நல்லுறவைப் பேணி வருகிறது.
இந்தச் சூழலில், வான் எல்லைகளை ஏவுகணைகள் மற்றும் எதிரி நாட்டுப் போர் விமானங்களிடமிருந்து பாதுகாப்பதற்காக ரஷியாவின் எஸ்-400 ஏவுகணை சாதனங்களை கொள்முதல் செய்வதற்கு துருக்கி முடிவு செய்துள்ளது.
ரஷிய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்கெய் லாவ்ரோவை கடந்த வாரம் சந்தித்த துருக்கி வெளியுறவுத் துறை அமைச்சர் மேவ்லுட் காவுசோகுலு இதற்கான ஒப்பந்தத்தை நிறைவு செய்தார்.
இந்த நலையில், அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் சார்லஸ் சம்மர்ஸ் கூறியதாவது: ரஷியாவிடமிருந்து எஸ்-400 ஏவுகணை சாதனங்களை துருக்கி வாங்குவதை ஒருபோதும் ஏற்க முடியாது என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளோம்.
எனவே, அந்த சாதனங்களின் கொள்முதல் நடவடிக்கைகளை துருக்கி தொடர்ந்தால், அது அந்த நாட்டுடன் இணைந்து எஃப்-35 ரக போர் விமானங்கள் தயாரிக்கும் திட்டத்துக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும்.
எஃப்-35 விமானத்துக்கான பாகங்களை துருக்கியில் தயாரிப்பது குறித்து அந்த நாட்டுடன் பேச்சுவார்த்தையை தொடர்ந்து நடத்துவோம்.
எனினும், எஸ்-400 ஏவுகணை சாதனங்கள் வாங்குவதை துருக்கி கைவிடாதவரை, கூட்டுத் தயாரிப்பு நடவடிக்கைகளை நிறுத்திவைக்க முடிவு செய்துள்ளோம் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com