மெக்ஸிகோ எல்லையை மூட முழு ஆயத்தம்

மெக்ஸிகோவுடனான எல்லையை 100 சதவீதம் மூடுவதற்குத் தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
மெக்ஸிகோ எல்லையை மூட முழு ஆயத்தம்


மெக்ஸிகோவுடனான எல்லையை 100 சதவீதம் மூடுவதற்குத் தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
மெக்ஸிகோ எல்லையில் தற்போது தேசிய அவசர நிலை உள்ளது.
அந்தப் பகுதியிலிருந்து சட்டவிரோத அகதிகள் அமெரிக்காவுக்குள் நுழைந்து, நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் அபாயம் தொடர்கிறது.
இந்த நிலைக்கு எதிரான வலுவான சட்டங்களை இயற்றுவதற்கு  எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி எம்.பி.க்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
மேலும், சட்டவிரோத அகதிகள் தங்களது எல்லை வழியாக அமெரிக்காவுக்குள் வருவதை மெக்ஸிகோ தடுக்க வேண்டும்.
அத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாவிட்டால், மெக்ஸிகோ எல்லையை முழுவதும் மூடுவதற்கு 100 சதவீதம் தயாராக உள்ளோம் என்றார் அதிபர் டொனால்ட் டிரம்ப்.
இதற்கிடையே, மெக்ஸிகோ எல்லையை மூடினால் அது அமெரிக்காவின் பொருளாதாரத்தை கடுமையாக பாதிக்கலாம் என்று செனட் சபைக்கான ஜனநாயகக் கட்சித் தலைவர் மிட்ச் மெக்கோனல் எச்சரித்துள்ளார்.
இதே கருத்தை அமெரிக்க வர்த்தகர் சங்கமும் தெரிவித்து வருகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com