எஃப்-16 விவகாரத்தில் இந்தியா பொய்யான ஆதாரத்தை வெளியிட்டுள்ளது: பாகிஸ்தான் திட்டவட்டம்

பாகிஸ்தானின் எஃப்-16 போர் விமானத்தை, தனது மிக்-21 விமானம் சுட்டு வீழ்த்தியதாக இந்தியா கூறி வருவது குறித்து அந்தப் பத்திரிகை சந்தேகம் எழுப்பியது.
எஃப்-16 விவகாரத்தில் இந்தியா பொய்யான ஆதாரத்தை வெளியிட்டுள்ளது: பாகிஸ்தான் திட்டவட்டம்

இந்தியாவுடனான கடந்த பிப்ரவரி மாத வான் சண்டைக்குப் பிறகு பாகிஸ்தானின் எஃப்-16 ரக விமானங்களின் எண்ணிக்கையை அமெரிக்க அதிகாரிகள் சரிபார்த்ததில், அவற்றில் ஒன்று கூட குறையவில்லை என்று தெரிய வந்ததாக அமெரிக்காவிலிருந்து வெளியாகும் "ஃபாரின் பாலிஸி' பத்திரிகை தெரிவித்திருந்தது. 

இதன் மூலம், பாகிஸ்தானின் எஃப்-16 போர் விமானத்தை, தனது மிக்-21 விமானம் சுட்டு வீழ்த்தியதாக இந்தியா கூறி வருவது குறித்து அந்தப் பத்திரிகை சந்தேகம் எழுப்பியது.

இந்திய - பாகிஸ்தான் எல்லையில் இரு நாட்டு விமானப் படைகளுக்கும் நடந்த வான் சண்டைக்குப் பிறகு, பாகிஸ்தானிலுள்ள எஃப்-16 விமானங்களை தங்கள் நாட்டு அதிகாரிகள் கணக்கெடுப்பு நடத்தியாகக் கூறப்படுவது குறித்து எதுவும் தெரியாது. அமெரிக்க ராணுவ தளவாடங்கள் விற்பனை செய்யப்பட்டதற்குப் பிறகு மேற்கொள்ளப்படும் கண்காணிப்பு குறித்து எங்களால் கருத்து கூற முடியாது.

பயங்கரவாத விவகாரத்தைப் பொருத்தவரை, பாகிஸ்தானுக்கு அமெரிக்கா அளித்து வந்த ராணுவ உதவி கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும் என்று அமெரிக்கப் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்த இந்திய விமானப் படை துணை தளபதி ஆர்.ஜி.வி. கபூர், 8 முதல் 10 கி.மீ. இடைவெளியில் இரு விமானங்கள் வீழ்த்தப்பட்டு அதிலிருந்த விமானிகள் பாராசூட் மூலம் குதித்தது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் ஒரு விமானம் எஃப்-16 ரகத்தைச் சேர்ந்தது என்பது அது வெளியிட்ட மின்னணு குறியீட்டு அலைகள் மூலம் தெரிய வந்ததாகவும் திட்டவட்டமாகத் தெரிவித்தார். மேலும் அந்த ஆதாரங்களும் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது.

இந்நிலையில், பாகிஸ்தானின் எஃப்-16 போர் விமானம் சுட்டு வீழ்த்தப்படவில்லை. இந்தியா பொய்யான ஆதாரத்தை வெளியிட்டுள்ளது என்று பாகிஸ்தான் ராணுவ செய்தித்தொடர்பாளர் ஆசிப் கஃபூர் திட்டவட்டமாக தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com