பாகிஸ்தான்: வெள்ளத்தில் 8 பேர் பலி

பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் ஏற்பட்ட திடீர் மழை, வெள்ளத்தில் சிக்கி பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 8 பேர் பலியாகினர்.

பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் ஏற்பட்ட திடீர் மழை, வெள்ளத்தில் சிக்கி பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 8 பேர் பலியாகினர்.
 பாகிஸ்தானின் வடமேற்கு மற்றும் தெற்கு பகுதியில் உள்ள மாகாணங்களில் வெள்ளிக்கிழமை இரவு முதல் கனத்த மழை பெய்து வருகிறது. ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள தெற்கு வஜிரிஸ்தான் மாவட்டத்தில் மட்டும் வெள்ளத்தில் மூழ்கி 8 பேர் உயிரிழந்தனர்.
 வஜரிஸ்தான் பகுதியைச் சேர்ந்த குடும்பத்தினர் திருமண நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு, வாகனத்தில் வீடு திரும்பியபோது, அவர்களது வாகனம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. இதில் பெண்கள், குழந்தைகள் உள்பட 8 பேரது உடலை மீட்பு படையினர் கண்டெடுத்துள்ளனர். வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட மேலும் சில குழந்தைகளை தேடும் பணி நடைபெற்று வருகிறது. திடீரென ஏற்பட்ட வெள்ளத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் உயிரிழந்தது அந்த பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
 மழை நிலவரம் குறித்து அந்நாட்டின் வானிலை ஆய்வு மையம் கூறுகையில், " நாடு முழுவதும் வரும் 18-ஆம் தேதி வரை பல இடங்களில் கன மழை பெய்யக்கூடும்.
 சில இடங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யும். மலைப்பாங்கான பகுதிகளில் வெள்ளம் ஏற்பட வாய்ப்புண்டு' என்றது.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com