சுடச்சுட

  
  IVANKATRUM

  பெண்கள் முன்னேற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் மகள் இவாங்கா டிரம்ப் ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
   இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் மகளும், அவரது முதுநிலை ஆலோசகருமான இவங்கா டிரம்ப் ஆப்பிரிக்க நாடுகளான எத்தியோப்பியா மற்றும் ஐவரி கோஸ்ட்டில் 4 நாள் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார்.
   இதற்காக, எத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபாவை அவர் ஞாயிற்றுக்கிழமை வந்தடைந்தார்.
   அந்த இரு நாடுகளிலும் உள்ள 5 கோடி பெண்களின் வாழ்க்கைத் தரத்தை வரும் 2025-ஆம் ஆண்டுக்குள் மேம்படுத்துவதற்கான விழிப்புணர்வுப் பிரசாரத்தை அவர் மேற்கொள்ளவிருக்கிறார்.
   குறிப்பாக, பணிக்குச் செல்லும் பெண்களின் முன்னேற்றத்துக்கான பிரசாரத்தை அவர் மேற்கொள்கிறார்.
   அதற்காக, காபி தோட்டங்கள், பெண்கள் நடத்தும் நெசவாலை உள்ளிட்ட இடங்களுக்குச் செல்ல அவர் திட்டமிட்டுள்ளார்.
   மேலும், உலக வங்கி நடத்தவிருக்கும் மாநாட்டிலும் அவர் கலந்து கொள்ளவிருக்கிறார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
   ஆப்பிரிக்க நாடுகளுக்கான அமெரிக்க நிதியுதவியைக் குறைப்பதற்கு முயன்று வரும் டொனால்ட் டிரம்ப், அந்த கண்டத்தைச் சேர்ந்த நாடுகள் குறித்து தரக் குறைவாகப் பேசியதாக கடந்த ஆண்டு சர்ச்சை எழுந்தது.
   இந்தச் சூழலில், ஆப்பிரிக்க பெண்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கான பிரசாரத்தை இவாங்கா டிரம்ப் மேற்கொள்வது குறிப்பிடத்தக்கது.
   
   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai