Enable Javscript for better performance
உலகின் மிகப் பெரிய விமானம் சோதனை ஓட்டம்- Dinamani

சுடச்சுட

    
    AP

    அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டு வரும் உலகின் மிகப் பெரிய விமானமான ஸ்டிராட்டோலாஞ்ச், முதல் முறையாக சோதனை முறையில் பறக்கவிடப்பட்டுள்ளது.
     இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:
     அமெரிக்க தனியார் நிறுவனமான ஸ்கேல்டு காம்போனென்ட்ஸ் உலகின் மிகப் பெரிய விமானத்தை உருவாக்கி வருகிறது.
     இரண்டு விமானங்களை இணைத்ததைப் போன்ற தோற்றம் கொண்ட அந்த விமானம், கலிஃபோர்னியா மாகாணம், மோஹாவி சோதனை மையத்தில் முதல் முறையாக சோதனை முறையில் சனிக்கிழமை பறக்கவிடப்பட்டது.
     விண்வெளியில் பறந்து செல்லும் வகையில் இந்த விமானம் வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
     செங்குத்தாகப் பறந்து செல்லும் ராக்கெட்டுக்கு பதிலாக, இந்த விமானத்தைப் பயன்படுத்தி செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த முடியும்.
     117 மீட்டர் அகலம் கொண்ட இந்த விமானம், அதிகபட்சமாக மணிக்கு 304 கி.மீ. வேகத்தில் பறக்க கூடியது. இந்த விமானம், 5 கி.மீ. உயரத்தைத் தாண்டிச் செல்லக் கூடியது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai