சுடச்சுட

  

  நியூயார்க், வாஷிங்டன் நோக்கி முன்னேறும் பெரும் புயல்: அமெரிக்காவில் பதற்றம்

  By ANI  |   Published on : 15th April 2019 01:06 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  Deadly_storms_threaten_90_million_lives_across_USA

   

  அமெரிக்காவின் தெற்குப் பகுதியில் இருந்து நியூயார்க், வாஷிங்டன் மற்றும் அட்லாண்டா ஆகிய முக்கிய நகரங்களை நோக்கி பெரும் புயல் முன்னேறி வருவதால் அங்கு பதற்றமான சூழல் காணப்படுகிறது. 

  இதுவரை இந்த புயல் பாதிப்பால் தெற்கு அமெரிக்காவின் டெக்ஸாஸ் நகரில் மட்டும் 3 சிறுவர்கள் உட்பட 5 பேர் உயிரிழந்தனர். இதனால் அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை முடிங்கியுள்ளது. மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன. சாலைகள் உடைந்து போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. 

  இந்நிலையில், அந்நாட்டின் முக்கிய நகரங்களை நோக்கி இந்த புயல் திசை வலுப்பெற்றுள்ளதால் சுமார் 90 மில்லியன் மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குரியாகி உள்ளது. மேலும் இதனால் சூறைக்காற்று மற்றும் கனமழை பெய்யும் என அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai