சுடச்சுட

  
  Iran_flood

   

  ஈரானில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 76-ஆக அதிகரித்துள்ளது.

  ஈரானில் மார்ச் 19-ஆம் தேதி ஏற்பட்ட பெரு வெள்ளத்தின் காரணத்தால் அங்கு மொத்தமுள்ள 31 மாகாணங்களில் 25 மாகாணங்கள் பெரும் சோதமடைந்தது. பல ஆயிரம் மக்கள் தங்கள் வீடு மற்றும் உடமைகளை இழந்து கடும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.  

  இதன் பாதிப்பு அங்கு குறையாத நிலையில், வெள்ளம் காரணமாக ஏற்பட்டுள்ள உயிரிழப்புகளின் எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை வரை 76-ஆக அதிகரித்துள்ளது.

  இந்நிலையில், அந்நாட்டின் தெற்கு மாகாணங்களில் மீண்டுமொரு மிகப்பெரிய பெருவெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளதாக ஈரான் வானிலைய ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 

  TAGS
  Iran flood
  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai