ஈரான்: ஹிஜபை அகற்றி போராட்டம் நடத்திய பெண்ணுக்கு ஓராண்டு சிறை

ஈரானில், தலையை மறைத்து அணியக் கூடிய துணியை (ஹிஜப்) கழற்றி போராட்டம் நடத்திய பெண்ணுக்கு 1 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

ஈரானில், தலையை மறைத்து அணியக் கூடிய துணியை (ஹிஜப்) கழற்றி போராட்டம் நடத்திய பெண்ணுக்கு 1 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
 இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:
 ஈரானில் ஹிஜப் அணிவதை கட்டாயமாக்கும் சட்டத்தை எதிர்த்து பெண் உரிமை ஆர்வலர்கள் போராட்டம் நடத்தி வருகிறனர்.
 அதன் ஒரு பகுதியாக, விடா மொவஹெட் என்ற பெண், தனது ஹிஜபைக் கழற்றி, உயர்த்திப் பிடித்து தலைநகர் டெஹ்ரானில் கடந்த 2017-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் போராட்டம் நடத்தினார். அதனைத் தொடர்ந்து, அவரை போலீஸார் கைது செய்தனர். எனினும், ஒரு மாதம் கழித்து அவர் தற்காலிக ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
 இந்த நிலையில், பொதுமக்களை தவறிழைக்கத் தூண்டிய குற்றச் சாட்டின் பேரில் விடா மொவஹெடுக்கு 1 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக அவரது வழக்குரைஞர் தெரிவித்தார்.
 எனினும், விடா மொவஹெடுக்கு ஈரான் மதத் தலைவர் அயதுல்லா கமேனி பொதுமன்னிப்பு அளித்துவிட்டதாகவும், அதன் காரணமாக அவர் சிறையில் அடைக்கப்பட மாட்டார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com