850 வருட பழமையான பிரான்ஸ் தேவாலயத்தில் பயங்கர தீ! 

பாரிசில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க நோட்ரே டேம் தேவாலத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் தேவலாயத்தின் மேற்கூரை முற்றிலும் எரிந்து
850 வருட பழமையான பிரான்ஸ் தேவாலயத்தில் பயங்கர தீ! 


பாரிசில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க நோட்ரே டேம் தேவாலத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் தேவலாயத்தின் மேற்கூரை முற்றிலும் எரிந்து சாம்பலானது. 

பிரான்ஸ் தலைநகர், பாரிஸிஸ் 850 வருட பழமையான பாரம்பரியாகச் சின்னமாக திகழும் வரலாற்றுச் சிறப்புமிக்க நோட்ரே டேம் தேவாலயம். ஐரோப்பிய கட்டிட கலைக்கு உதாரணமாக விளங்கும் இந்த தேவலாயம் 13 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. வருடம் தோறும் லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் பார்த்துச் செல்கின்றனர். 

இந்த தேவாலயத்தில் புனரமைப்புப் பணிகள் நடைபெற்று வந்தது. 

இந்நிலையில், உள்ளூர் நேரப்படி மாலை 6 மணிக்கு திடீரென் தீ விபத்து ஏற்பட்டது. இதில், தேவாயத்தின் மேற்கூரை முற்றிலும் எரிந்து சாம்பலானது. தேவாலயத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. 

சுமார் 400 தீயணைப்பு வாகனங்களுடன் தீயணைப்பு வீரர்களின் பல மணி நேர போராடத்திற்கு தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக தீயணைப்பு துறை அதிகாரி ஜின்-கிளாட் காலெட் தெரிவித்துள்ளார். 

வரலாற்றுச் சிறப்புமிக்க தேவாலயம் தீ விபத்தில் சிக்கியுள்ளது அந்நாட்டு மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

தீ விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. 

Fire breaks out at Notre-Dame cathedral in Pari

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com