சுடச்சுட

  

  அசாஞ்சே கைதுக்கு பிறகு ஈக்வடார் வலைதளங்களில் 4 கோடி ஊடுருவல்கள்

  By DIN  |   Published on : 17th April 2019 01:56 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேவை தாங்கள் பிரிட்டன் போலீஸாரிடம் ஒப்படைத்த பிறகு, தங்கள் நாட்டு வலைதளங்களில் 4 கோடி ஊடுருவல் தாக்குதல்கள் நடைபெற்றுள்ளதாக ஈக்வடார் தெரிவித்துள்ளது.
   இதுகுறித்து அந்த நாட்டின் தகவல் தொடர்பு தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் பேட்ரிசியோ ரியல் கூறியதாவது:
   ஜூலியன் அசாஞ்சேவுக்கு நாங்கள் வழங்கியிருந்த அடைக்கலத்தை விலக்கிக் கொண்டதால் அவர் பிரிட்டனில் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, எங்களது வலைதளங்களில் 4 கோடி முறை ஊடுருவல் தாக்குதல் நடைபெற்றது.
   கடந்த வியாழக்கிழமை தொடங்கிய இந்த ஊருவல், பெரும்பாலும் அமெரிக்கா, பிரேசில், ஹாலந்து, ஜெர்மனி, ருமேனியா, பிரான்ஸ், ஆஸ்திரியா, பிரிட்டன் ஆகிய நாடுகளிலிருந்து நடைபெற்றுள்ளது என்றார் அவர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai