சுடச்சுட

  

  பாகிஸ்தானைப் புரட்டிப் போட்ட புழுதிப் புயல் மற்றும் இடிமின்னல் மழைக்கு 39 பேர் பலியாகியுள்ளனர்.
   இதுகுறித்து செவ்வாய்க்கிழமை வெளியான ஊடகத் தகவல்கள் தெரிவிப்பதாவது:
   பாகிஸ்தானின் பஞ்சாப் மற்றும் சிந்து மாகாணங்களில் திங்கள்கிழமை பெய்த இடிமின்னலுடன் கூடிய கனமழைக்கு 39 பேர் உயிரிழந்துள்ளனர். பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்ததுடன் ஏராளமான பொருள்களும் சேதமாகியுள்ளன. மின் விநியோகம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
   கன மழை காரணமாக இரண்டு பெண்கள், ஒரு குழந்தை உள்பட மொத்தம் 39 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று அந்த ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai