இந்தோனேசியாவில் தேர்தல்: அதிபர் விடோடோ முன்னிலை

இந்தோனேஷிய பொதுத் தேர்தல் புதன்கிழமை நடைபெற்றது.அந்த நாட்டின் வரலாற்றிலேயே, அதிபர், துணை அதிபர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக ஒரே நாளில் நடைபெறும்
இந்தோனேசியாவில் தேர்தல்: அதிபர் விடோடோ முன்னிலை


இந்தோனேஷிய பொதுத் தேர்தல் புதன்கிழமை நடைபெற்றது.
அந்த நாட்டின் வரலாற்றிலேயே, அதிபர், துணை அதிபர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக ஒரே நாளில் நடைபெறும் முதல் தேர்தல் இது என்பது குறிப்பிடத்தக்கது.
சுமார் 19 கோடி வாக்காளர்கள் பங்கு பெறவிருக்கும் இந்தத் தேர்தலில், அதிபர் பதவிக்காக தற்போதைய அதிபர் ஜோகோ விடோடோவை எதிர்த்து, முன்னாள் ராணுவ தலைமைத் தளபதி பிரபோவோ சுபியான்டோ போட்டியிடுகிறார்.
இந்தத் தேர்தலின் அதிகாரப்பூர்வ  முடிவுகள் அடுத்த மாதம்தான் வெளியிடப்படும். எனினும், பூர்வாங்கமாக வெளியிடப்பட்ட தேர்தல் கணிப்புகளைக் கொண்டு, மக்கள் செல்வாக்கு மிக்க அதிபர் ஜோகோ விடோடோ மீண்டும் வெற்றி பெறுவார் என்று கூறப்படுகிறது. அவருக்கு 55 சதவீத வாக்குகளும், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பிரபோவோ சுபியான்டோவுக்கு 44 சதவீத வாக்குகளும் கிடைத்துள்ளதாக பல்வேறு கருத்துக் கணிப்புகளும் தெரிவிக்கின்றன.
சுமார் 17,000 தீவுகளைக் கொண்ட இந்தோனேசியாவில், தலைநகர் ஜகார்த்தாவில் மதியம் 1 மணியுடன் வாக்குப் பதிவு முடிக்கப்பட்டாலும், புயலால் பாதிக்கப்பட்ட பல பகுதிகளில் வாக்களார்கள் மிக நீண்ட வரிசையில் நின்றதால் வாக்குப் பதிவு நேரம் நீட்டிக்கப்பட்டது.
தேர்தல் பணிகளில் பிற வாகனங்களுடன், விமானங்கள், இருசக்கர வாகனங்கள், படகுகள், குதிரைகள், யானைகள் ஆகியவையும் ஈடுபடுத்தப்பட்டன.
உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடுகளில் இந்தோனேஷியாவும் ஒன்றாகும். இந்த வரிசையில், இந்தியா, அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக அந்த நாடு மூன்றாவது இடத்தை வகிக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com