சுடச்சுட

  
  security

  எகிப்து தலைநகர் கெய்ரோவில் சனிக்கிழமை அமைக்கப்பட்டிருந்த  வாக்குச் சாவடியில், தனது வாக்கை செலுத்த வந்தவரிடம் வாக்காளர் அடையாள அட்டையை  பரிசோதிக்கும் போலீஸார்.

  எகிப்தில் அதிபர் அப்தெல் ஃபடாஹ் அல்-சிசி (64) ஆட்சி நீடிக்கலாமா என்பது குறித்த பொதுவாக்கெடுப்பு சனிக்கிழமை தொடங்கியது.
  எகிப்தில் அதிபர் அல்-சிசியின் ஆட்சி காலத்தை நீடிக்கும் வகையில் அரசியலமைப்பு சட்டத்தில் மாற்றங்களை செய்யும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், அல்-சிசியின் ஆட்சி தொடரலாமா வேண்டாமா என்பது குறித்த கேள்விக்கு தீர்வு காணும் வகையில் அந்த நாட்டில் பொதுவாக்கெடுப்பு நடத்த முடிவு செய்யப்பட்டது.
  இதற்கான ஓட்டெடுப்பு சனிக்கிழமை தொடங்கியது. மூன்று நாள்கள் நடைபெறும் இந்த வாக்கெடுப்பில் பொதுமக்கள் திராளானோர் கலந்து கொண்டு தங்களது விருப்பங்களை வாக்குச்சீட்டின் மூலமாக தெரிவிக்க உள்ளனர்.
  இந்த வாக்கெடுப்புக்கு எகிப்தின் மனித உரிமைகள் அமைப்பினர் கடும் எதிர்ப்புகளை தெரிவித்துள்ளனர். இருப்பினும், இந்த பொதுவாக்கெடுப்பின் மூலமாக மக்கள்,  அரசியலமைப்பு சட்டத்தில் உரிய திருத்தங்களை மேற்கொள்வதற்கு தங்களது முழு ஒப்புதலை வழங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு திருத்தங்கள் மேற்கொள்ளப்படும்பட்சத்தில், அல்-சிசியின் பதவிக்காலம் 2024-ஆம் ஆண்டு வரையில் நீடிக்கப்படும் வாய்ப்புள்ளது.
  கொந்தளிப்பு நிறைந்த பிராந்தியத்தில் அமைந்துள்ள எகிப்து, அரபு கண்டத்தில் மிகப்பெரிய நாடாக திகழ்கிறது. அங்கு ஸ்திரத்தன்மையான ஆட்சியைக் கொடுக்கும் வகையில் அல்-சிசி செயல்படுவார் என்ற நம்பிக்கை பெரும்பான்மையான மக்களிடையே உள்ளது. அப்படி மக்களின் ஒருமித்த  ஆதரவு கிடைக்கும் பட்சத்தில் அல்-சிசியின் ஆட்சியானது அடுத்த ஆறு ஆண்டு காலத்துக்கு தொடரும்.  அப்போது நீதித் துறையில் தனது கட்டுப்பாட்டை மேலும் அதிகரிப்பதுடன், அரசியல் வாழ்க்கையில் ராணுவத்துக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai