20-ஆம் நூற்றாண்டின் பெரும் விபத்துகள்: ஐ.நா. பட்டியலில் போபால் விஷவாயு சம்பவம்

இருபதாம் நூற்றாண்டின் மிகப் பெரும் தொழிற்சாலை விபத்துகளில், போபால் வாயுக்கசிவால் ஏற்பட்ட விபத்தும் ஒன்று என ஐ.நா. அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
20-ஆம் நூற்றாண்டின் பெரும் விபத்துகள்: ஐ.நா. பட்டியலில் போபால் விஷவாயு சம்பவம்

இருபதாம் நூற்றாண்டின் மிகப் பெரும் தொழிற்சாலை விபத்துகளில், போபால் வாயுக்கசிவால் ஏற்பட்ட விபத்தும் ஒன்று என ஐ.நா. அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, ஐ.நா.வின் உறுப்பு அமைப்பான சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ஐஎல்ஓ) வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
மத்தியப் பிரதேச மாநிலத்தின் தலைநகர் போபாலில், பூச்சிக்கொல்லித் தொழிற்சாலையில் கடந்த 1984-ஆம் ஆண்டு நிகழ்ந்த விஷவாயுக்கசிவினால், சுமார் 30 டன் அளவிலான "மெத்தில் ஐசோசயனைடு' வாயு வெளியானது. இது மிகவும் நச்சுத்தன்மை கொண்டதாகும். இந்த வாயுக்கசிவினால், அந்தத் தொழிற்சாலையில் பணிபுரிந்தவர்கள், அருகில் வாழ்ந்து வந்த மக்கள் என சுமார் 6 லட்சம் பேர் பாதிக்கப்பட்டனர்.
இந்த விபத்தின் காரணமாக, சுமார் 15,000 உயிரிழப்புகள் நேரிட்டதாக மாநில அரசு கணக்கிட்டுள்ளது. அப்போது பரவிய நச்சுத்தன்மை வாய்ந்த வாயு காரணமாகப் பாதிக்கப்பட்டோரின் குழந்தைகளுக்கும் நுரையீரல் தொடர்பான பிரச்னைகள் காணப்படுகின்றன. அவர்களின் உடல் உள்ளுறுப்புகளும், நோய் எதிர்ப்பு மண்டலமும் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளன என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தவிர, உக்ரைனில் நிகழ்ந்த செர்னோபில் அணுஉலை விபத்து (1986), ஜப்பானில் நிகழ்ந்த ஃபுகுஷிமா அணு உலை விபத்து (2011), வங்கதேசத் தலைநகர் டாக்காவில் நிகழ்ந்த ராணா பிளாசா கட்டட இடிபாடு (2013) உள்ளிட்டவையும் இந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.
தொழிற்சாலை விபத்து மற்றும் தொழிற்சாலை சார்ந்த உடல் உபாதைகளால் ஆண்டுதோறும் சுமார் 27.8 லட்சம் தொழிலாளர்கள் மரணமடைந்து வருகின்றனர் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com