இலங்கை தொடர் குண்டு வெடிப்பு 8-ஆக அதிகரிப்பு

இலங்கையில் தேவாலயங்கள் உள்ளிட்ட 6 இடங்களில் நிழ்ந்த குண்டு வெடிப்பில் பலியானோரின் எண்ணிக்கை 158-ஆக அதிகரித்துள்ளது.
இலங்கை தொடர் குண்டு வெடிப்பு 8-ஆக அதிகரிப்பு

இலங்கையில் தேவாலயங்கள் உள்ளிட்ட 6 இடங்களில் நிழ்ந்த குண்டு வெடிப்பில் பலியானோரின் எண்ணிக்கை 158-ஆக அதிகரித்துள்ளது.

ஈஸ்டர் பண்டிகையையொட்டி இலங்கையில் தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைக்கு ஞாயிற்றுக்கிழமை (ஏப். 21) ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. 

இந்நிலையில், காலை 8:45 மணியளவில் கொச்சிக்கடை அந்தோணியார் தேவாலயம், நீர் கொடும்பு கட்டுவப்பிட்டிய தேவாலயம், மட்டக்களப்பு தேவாலயம், கிங்ஸ்பெரி, ஷாங்கிரி லா, சின்னமன் கிராண்ட் உள்ளிட்ட நட்சத்திர விடுதிகள் என 6 இடங்களில் அடுத்தடுத்து சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. 

இதையடுத்து, இலங்கை தலைநகர் கொழுப்புவில் மதியம் 3 மணியளவில் மேலும் அடுத்தடுத்து 2 இடங்களில் குண்டு வெடித்தது. இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 158-ஆக அதிகரித்தது. இதில் 35 பேர் வெளிநாட்டினர் என்று தெரியவந்துள்ளது. 400-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

தொடர் குண்டுவெடிப்புச் சம்பவங்களுக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை. இலங்கை முழுவதும் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் யாரும் அதிகளவில் பொது இடங்களில் கூட வேண்டாம் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. 200-க்கும் மேற்பட்ட குழுக்கள் தீவிர விசாரணை நடத்தி வருகிறது. 

இலங்கை முழுவதும் உச்சகட்ட பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் அடுத்த 2 நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் இந்த தொடர் குண்டுவெடிப்புச் சம்பவங்கள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com