இலங்கையில் 6 இடங்களில் குண்டு வெடிப்பு: பலி எண்ணிக்கை 156ஆக உயர்வு 

இலங்கையில் தேவாலயங்கள் உள்ளிட்ட 6 இடங்களில் நிழ்ந்த குண்டு வெடிப்பில் பலியானோரின் எண்ணிக்கை 150ஐ கடந்துள்ளது.
இலங்கையில் 6 இடங்களில் குண்டு வெடிப்பு: பலி எண்ணிக்கை 156ஆக உயர்வு 

இலங்கையில் தேவாலயங்கள் உள்ளிட்ட 6 இடங்களில் நிழ்ந்த குண்டு வெடிப்பில் பலியானோரின் எண்ணிக்கை 150ஐ கடந்துள்ளது.

ஈஸ்டர் பண்டிகையையொட்டி இலங்கையில் தேவாலயங்களில் இன்று சிறப்பு பிரார்த்தனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. அப்போது கொச்சிக்கடை அந்தோணியார் தேவாலயம், நீர் கொடும்பு கட்டுவப்பிட்டிய தேவாலயம், மட்டக்களப்பு தேவாலயம், கிங்ஸ்பெரி, ஷாங்கிரி லா, சின்னமன் கிராண்ட் ஆகிய ஹோட்டகளில் இன்று சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. இந்த சம்பவத்தில் பலியானோரின் எண்ணிக்கை 150ஐ கடந்துள்ளது. இதில் 35 வெளிநாட்டினர் அடங்குவர்.

படுகாயமடைந்த 400க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். எனவே, உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் எனத் தெரிகிறது. குண்டு வெடிப்புக்கு இதுவரை எந்த பயங்கரவாத இயக்கமும் பொறுப்பேற்கவில்லை. இதுதொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவத்தை தொடர்ந்து இலங்கை முழுவதும் உச்சகட்ட பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் பள்ளி, கல்லூரிகளுக்கும் 2 நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குண்டு வெடிப்பு நிகழ்ந்த இடங்களை அந்நாட்டு அதிபர் சிறிசேன நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதனிடையே இலங்கை நிலவரத்தை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், இதுகுறித்து இந்திய தூதரிடம் கேட்டு அறிந்தாகவும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தனது டிவிட்டரில் தெரிவித்துள்ளார். மேலும் இலங்கையில் உள்ள இந்தியர்களை தொடர்புகொள்ள உதவி எண்களையும் அவர் அறிவித்துள்ளார். அதில், +94777903082 +94112422788 +94112422789 தொடர்புகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com