இலங்கையில் இன்று நள்ளிரவு முதல் அவசர நிலை பிரகடனம்: அதிபர் மைத்ரிபால சிறீசேனா

ஈஸ்டர் நாளன்று இலங்கையில் அடுத்தடுத்து 8 இடங்களில் தொடர் குண்டுவெடிப்புச் சம்பவத்தை அடுத்து இலங்கையில் இன்று நள்ளிரவு முதல் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இலங்கையில் இன்று நள்ளிரவு முதல் அவசர நிலை பிரகடனம்: அதிபர் மைத்ரிபால சிறீசேனா


கொழும்பு: ஈஸ்டர் நாளன்று இலங்கையில் அடுத்தடுத்து 8 இடங்களில் தொடர் குண்டுவெடிப்புச் சம்பவத்தை அடுத்து இலங்கையில் இன்று நள்ளிரவு முதல் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கையில் இன்று நள்ளிரவு முதல் அவசர நிலை பிரகடனப்படுத்தப்படுவதாக அந்நாட்டு அதிபர் மைத்ரிபால சிறீசேனா அறிவித்துள்ளார்.

ஈஸ்டர் தினக் கொண்டாட்டத்தின் போது தேவாலயங்கள் உட்பட 8 இடங்களில் நடத்தப்பட்ட தொடர் தாக்குதலில் 295 பேர் உயிரிழந்தனர். 400க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

நேற்று இரவு ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்த நிலையில், இன்று இரவும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கட்டது. இதற்கிடையே அசாதாரண சூழ்நிலையை கட்டுக்குள் கொண்டு வர இலங்கையில் அவசர நிலையை பிரகடனப்படுத்தியுள்ளார் அதிபர்.

இலங்கையில் இன்று நள்ளிரவு முதல் அவசர நிலை பிரகடனப்படுத்தப்படுவதால், ஊடகங்களுக்கும், அரசியல் கட்சியினருக்கும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்.

இலங்கையில் நடந்த தொடர் குண்டு வெடிப்புக்கு, உள்ளூர் இஸ்லாமிய அமைப்புதான் காரணம் என்று அறிவித்திருக்கும் அரசு, உயிரிழப்பு 300 ஆக உயர்ந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. மேலும், குண்டு வெடிப்பு நிகழ்த்திய அனைவருமே இலங்கையைச் சேர்ந்தவர்கள்தான் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com