நேபாளத்தில் அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கம்

நேபாளத்தில் புதன்கிழமை காலை அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. 
நேபாளத்தில் அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கம்

நேபாளத்தில் புதன்கிழமை காலை அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. இதுகுறித்து இஎம்எஸ்சி தெரிவித்ததாவது,

முதலில் காலை 6:14 மணியளவில் காத்மாண்டுவில் 4.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

பின்னர் இதனைத் தொடர்ந்து தாடிங் மாவட்டத்திலுள்ள நௌபைஸ் எனுமிடத்தில் காலை 6:29 மணியளவில் 5.2 ரிக்டர் அளவிலும், காலை 6:40 மணியளவில் 4.3 ரிக்டர் அளவிலும் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டது என்றிருந்தது.

இதனால் மக்கள் சாலைகளில் தஞ்சமடைந்தனர். மேலும் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com