உக்ரைன்: புதினை சமாளிப்பாரா புதிய அதிபர்?

பல ஆண்டுகளாக நகைச்சுவை படங்களில் நடித்துக் கொண்டிருந்த வொலோதிமீர் ùஸலன்ஸ்கி, தற்போது திடீரென்று உக்ரைனின் அதிபராகியிருக்கிறார்.
உக்ரைன்: புதினை சமாளிப்பாரா புதிய அதிபர்?


பல ஆண்டுகளாக நகைச்சுவை படங்களில் நடித்துக் கொண்டிருந்த வொலோதிமீர் ùஸலன்ஸ்கி, தற்போது திடீரென்று உக்ரைனின் அதிபராகியிருக்கிறார்.
நீண்ட கால கலைச் சேவைக்கு இடையே அவ்வப்போது அரசியல் ரீதியிலான கருத்துகளைக் கூறி வந்தாலும், உக்ரைன் அதிபராக தொலைக்காட்சித் தொடரில் நடித்த ஒரே அனுபவத்துடன் அரசியல் களமிறங்கிய அவரை, பொதுமக்கள் உண்மையாகவே அதிபர் ஆக்கிவிட்டிருக்கிறார்கள்.
ஆனால், இப்போதைய சூழல் தொலைக்காட்சித் தொடரைப் போன்றதோ, இயக்குநரின் எழுத்தை திரை வடிவமாக்கும் திரைப்படங்களைப் போன்றதோ இல்லை.
நிதர்சனங்களையும், நாட்டை எதிர்நோக்கியுள்ள பிரச்னைகளையும் அவர் ரத்தமும் சதையுமாக சந்திக்கும் நேரமிது.
அதிலும், உக்ரைன் எதிர்கொண்டுள்ள மிக முக்கியமான உள்நாட்டுப் போர் பிரச்னை அவ்வளவு சாதாரணமானது அல்ல.
கிழக்கு உக்ரைன் விவகாரத்தில் சண்டைக் கோழிகளாக சிலுப்பி நிற்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும், ரஷியாவுக்கும் இடையே வசமாக சிக்கியிருக்கிறார் வொலோதிமீர் ùஸலன்ஸ்கி.
தேர்தலில் வெற்றி பெற்ற தகவலறிந்தவுடனேயே, மேற்கத்திய நாடுகளுக்கு ஆதரவான உக்ரைனின் நிலைப்பாடு தொடரும் என்று சூளுரைத்த ùஸலன்ஸ்கி, உக்ரைன் உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக ரஷியாவுடன் உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தப்போவதாகவும் உறுதியளித்திருக்கிறார்.
இருந்தாலும், ரஷிய அதிபர் விளாதிமீர் புதினை உறுதிப்பாட்டுடன் எதிர்கொண்டு, பேச்சுவார்த்தை மூலம் நாட்டின் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளும் பக்குவம் அவருக்கு இருக்கிறதா? என்பது கேள்விக் குறியே என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.
இதுகுறித்து, ரஷியா மற்றும் உக்ரைன் விவகாரங்களை தொடர்ந்து கவனித்து வரும் சர்வதேச அரசியல் ஆய்வு மையத்தைச் சேர்ந்த நிபுணர் ஒருவர் கூறுகையில், ùஸலன்ஸ்கியின் அரசியல் அனுபவமின்மையை விளாதிமீர் புதின் தனக்கு சாதகமாக்கிக் கொள்வதற்கு நிறையவே வாய்ப்புள்ளது என்கிறார்.
"புதிய அதிபர் ùஸலன்ஸ்கியுடனான பேச்சுவார்த்தையின்போது, உக்ரைனுக்கு சில சலுகைகளை அளிப்பதற்கு விளாதிமீர் புதின் முன்வந்தாலும், ராஜீய ரீதியில் புதினின் கையே மேலோங்கியிருக்கும். சோவியத் யூனியனின் 
உளவுத் துறையில் பணியாற்றிய அனுபவம், வலிமை வாய்ந்த நாட்டின் தலைமையை நீண்ட காலம் தொடர்ந்து வகித்த பக்குவம் ஆகியவை புதினுக்கு கைகொடுக்கும் என்கிறார் அவர்.
எந்தவித முன் அனுபவமும் இல்லாமல், உக்ரைன் முப்படைகளின் தலைவராக பொறுப்பேற்கவிருக்கும் ùஸலன்ஸ்கியை, கிழக்கு உக்ரைன் நிலவரத்தை வைத்து விளாதிமீர் புதின் அச்சுறுத்துவதற்கும் வாய்ப்புள்ளது என்று அந்த நிபுணர் சுட்டிக் காட்டுகிறார்.
உக்ரைன் அதிபராக ùஸலன்ஸ்கி தேர்ந்தெடுக்கப்பட்டால், இரும்பு போன்ற மனம் படைத்த விளாதிமீர் புதினுக்கு அவர் எளிதில் இரையாகிவிடுவார் என்று தற்போதைய அதிபர் பெட்ரோ பொரொஷென்கோகூட தேர்தல் பிரசாத்தின்போது அடிக்கடி எச்சரித்தார். 
எனினும், அதைப் பற்றி கவலைப்படாத உக்ரைன் மக்கள் புதிய நம்பிக்கையுடன் ùஸலன்ஸ்கிக்கு மாபெரும் வெற்றியை அளித்திருக்கிறார்கள்.
அவர்களுக்கு அந்த நம்பிக்கைக்கும் காரணம் இல்லாமல் இல்லை.
உக்ரைனின் அங்கமாக இருந்த கிரைமீயா பகுதியை கடந்த 2014-ஆம் ஆண்டில் இணைத்துக் கொண்டதாலும், கிழக்குப் பகுதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவு அளிப்பதாலும் ரஷியா மீது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன.
இதனால் கணிசமாக பாதிக்கப்பட்டுள்ள ரஷியா, உக்ரைனுடனான பதற்றத்தைத் தணிப்பதன் மூலம் அந்தத் தடைகளிலிருந்து விடுபட விரும்புகிறது.
எனவே, புதிய உக்ரைன் அதிபருடன் பேச்சுவார்த்தை நடத்த ரஷியா மிகுந்த ஆவலுடன் உள்ளதாகக் கூறப்படுகிறது.
அத்தகைய பேச்சுவார்த்தையின்போது ரஷியாவுக்கு ஆதரவான நிலைப்பாடுகளை ùஸலன்ஸ்கி எடுத்தால், அதற்கு உக்ரைன் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவிப்பார்கள். ஆனால் அதே நேரம், ரஷிய மொழி பேசும் பகுதியில் பிறந்து, தனது கலைப் பயணத்தின் பெரும் பகுதியை ரஷியாவிலும், ரஷிய மொழிப் படைப்புகளிலும் செலவிட்ட ùஸலன்ஸ்கிக்கு சில சலுகளை வழங்க விளாதிமீர் புதின் தயங்க மாட்டார் எனவும், அதற்கு அடையாளமாக கிரைமீயா கடல் பகுதியில் கைது செய்யப்பட்ட உக்ரைன் கடற்படை வீரர்களை அவர் விரைவில் விடுதலை செய்யலாம் என்றும் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
எனினும், யார் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டாலும், சிக்கல் நிறைந்த உக்ரைன் பிரச்னைக்கு உடனடி தீர்வு காண்பது இயலாத காரியம் என்பதால் இந்த விவகாரத்தில் அதிரடி மாற்றங்களை எதிர்பார்க்க வேண்டாம் என்கிறார்கள் நிபுணர்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com