ஸ்பெயின் தேர்தல்: காடலோனியாவை மையப்படுத்தி காரசார விவாதம்

ஸ்பெயின் பொதுத் தேர்தலையொட்டி நடைபெற்ற முக்கிய கட்சித் தலைவர்களின் நேரடி விவாதத்தில், காடலோனியா விவகாரத்தை மையப்படுத்தி காரசாரமான கருத்துகள் பரிமாறிக்கொள்ளப்பட்டன.
ஸ்பெயின் தேர்தல்: காடலோனியாவை மையப்படுத்தி காரசார விவாதம்

ஸ்பெயின் பொதுத் தேர்தலையொட்டி நடைபெற்ற முக்கிய கட்சித் தலைவர்களின் நேரடி விவாதத்தில், காடலோனியா விவகாரத்தை மையப்படுத்தி காரசாரமான கருத்துகள் பரிமாறிக்கொள்ளப்பட்டன.
இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது: ஸ்பெயினில் வரும் ஞாயிற்றுக்கிழமை பொதுத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. அதனையொட்டி, தேர்தலில் போட்டியிடும் 4 முக்கிய கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்ற நேரடி விவாத நிகழ்ச்சி, அரசுத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.
அந்த விவாதத்தில், தற்போதைய பிரதமரும், ஸ்பெயின் சோஷலிச தொழிலாளர் கட்சியின் (பிஎஸ்ஓஇ) தலைவருமான பெட்ரோ சான்செஸ், மக்கள் கட்சியின் (பிபி) தலைவர் பாப்லோ கசாடோ, குடிமக்கள் கட்சியின் (சிஎஸ்) தலைவர் ஆல்பர்ட் ரிவேரா, பொடேமஸ் கட்சித் தலைவர் பப்லோ இக்லெசியாஸ் ஆகிய நால்வரும் பங்கேற்றனர்.
அப்போது பேசிய பிபி கட்சியின் தலைவர் கசாடோ, காடலோனியா பிரிவினைவாதத் தலைவர்களுடன் பிரதமர் பெட்ரோ சான்செஸ் பேச்சுவார்த்தை நடத்தியதை கடுமையாக விமர்சித்தார். மேலும், "ஸ்பெயின் பிரிவினையை விரும்புபவர்கள்தான் சான்செஸýக்கு வாக்களிப்பார்கள்' என்று கடுமையாகத் தெரிவித்தார். சிஎஸ் கட்சித் தலைவர் ஆல்பர்ட் ரிவேராவும், "ஸ்பெயினைத் துண்டாட நினைப்பவர்கள் முன் மண்டியிடாத பிரதமர்தான் எங்களுக்குத் தேவை' என்றார்.
தேசிய நாடாளுமன்றத்தில், காடலோனியா எம்.பி.க்களின் ஆதரவுடன் பிபி கட்சியின் ஆட்சியை கடந்த ஜூன் மாதம் பெட்ரோ சான்செஸ் கவிழ்த்ததை நினைவுபடுத்திய பாப்லோ கசாடோவும், ஆல்பர்ட் ரிவேராவும், அவர் ஸ்பெயினுக்கு துரோகம் இழைத்ததாக குற்றம் சாட்டினர்.
எனினும், இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்த பெட்ரோ சான்செஸ், காடலோனியாவில் கடந்த 2017-ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுவாக்கெடுப்பு போன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுப்பதற்காகவே, பிரிவினைவாதிளுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், தனி காடலோனியா குறித்து மீண்டும் பொதுவாக்கெடுப்பு நடத்துவதாக தாம் ஒருபோதும் கூறியதில்லை எனவும் விளக்கமளித்தார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com