ரஷ்ய அதிபர் புதின் - வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன் சந்திப்பு

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் ரஷ்ய அதிபர் புதினும்  வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன்னும் வியாழனன்று சந்தித்து பேச்சுவார்தை நடத்தினர். 
ரஷ்ய அதிபர் புதின் - வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன் சந்திப்பு

விளாடிவோஸ்டாக்: பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் ரஷ்ய அதிபர் புதினும்  வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன்னும் வியாழனன்று சந்தித்து பேச்சுவார்தை நடத்தினர். 

அதிபர் புதினை முதல்முறையாகச் சந்தித்துப் பேசுச்சுவார்தை நடத்த வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் புதன் மதியம் ரஷ்யா வந்தடைந்தார். தனது பிரத்யேக பச்சை நிற ரயில் வண்டியில் ரஷ்யாவின் கிழக்குப் பகுதியில் உள்ள விளாடிவோஸ்டாக் நகர ஹாசன் ரயில் நிலையத்திற்கு புதன்கிழமை மதியம் அவர் வந்தடைந்தார். அங்கு அவரை ரஷ்ய உயர் அதிகாரிகள் வரவேற்றனர்.

அங்கிருந்தபடியே ரஷ்யத் தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:

ரஷ்ய மக்களின் உற்சாகமான வவேற்புடன் நான் இங்கு வந்து சேர்த்துள்ளேன், முன்பே கூறியது போல எனது இந்தப் பயணமானது வெற்றிகரமாகவும் பயனளிக்கும் விதமாகவும் அமையும் என்று கருதுகிறேன். கொரிய தீபகற்பத்தில் நிலவும் பிரச்னைகளுக்குத் தீர்வு காணும் விதமாகவும், இரு நாட்டு உறவுகளை மேம்படுத்தும் விதமாகவும் நான் மரியாதைக்குரிய ரஷ்ய அதிபர் புதினுடன் பேச உள்ளேன்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.   

இந்நிலையில் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் ரஷ்ய அதிபர் புதினும்  வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன்னும் வியாழனன்று சந்தித்து பேச்சுவார்தை நடத்தினர். 

கிம் ஜாங் உன்னை சந்திக்க  விளாடிவோஸ்டோக் நகருக்கு வியாழனன்று  புதினும் வருகை தந்தார். இதைத்தொடர்ந்து, இரு நாட்டு தலைவர்களும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையின் போது, வடகொரியாவின் நேர்மறையான முயற்சிகளுக்கு ரஷ்யா முழு ஆதரவு அளிக்கும் என்று புதின் அதிபர் கிம் ஜாங் அன்னிடம் உறுதி அளித்தார்.

அணு ஆயுத சோதனைகளை கைவிடுவது தொடர்பாக வட கொரியாவுக்கும் அமெரிக்காவுக்கும்  நடைபெற்று வந்த பேச்சுவார்த்தைகள் தடைபட்டுள்ள நிலையில், கிம் ஜாங் உன்னின் ரஷ்யப் பயணமும் பேச்சுவார்தையுகம் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com