இலங்கையில் தொடர் குண்டு வெடிப்பு: 9 பயங்கரவாதிகளின் படங்கள் வெளியீடு 

இலங்கை தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தை நிகழ்த்தியதாக சந்தேகிக்கப்படும் 9 பயங்கரவாதிகளின் படங்களை அந்நாட்டு காவல்துறை வெளியிட்டுள்ளது.
இலங்கையில் தொடர் குண்டு வெடிப்பு: 9 பயங்கரவாதிகளின் படங்கள் வெளியீடு 

கொழும்பு: இலங்கை தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தை நிகழ்த்தியதாக சந்தேகிக்கப்படும் 9 பயங்கரவாதிகளின் படங்களை அந்நாட்டு காவல்துறை வெளியிட்டுள்ளது.

இலங்கை தலைநகர் கொழும்புவில் ஈஸ்டர் தினமான கடந்த ஞாயிறன்று தேவாலயங்கள், தங்கும் விடுதிகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பு தாக்குதல்களில் 359 பேர் மரணமடைந்தனர். 500-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக இலங்கை போலீசார் இதுவரை 50-க்கும் அதிகமானோரை  கைது செய்துள்ளனர். 18 பேரிடம் விசாரணை நடந்து வருகிறது.  மேலும் தேடுதல் வேட்டை தீவிரமாக நடந்து வருகிறது

நேஷனல் தவ்ஹீத் ஜமாஅத் என்னும் இஸ்லாமிய அடிப்படை வாத அமைப்புக்கு இந்த சம்பவத்தில் தொடர்புள்ளதாகவும், கடந்த மாதம் நியூசிலாந்தின் கிறைஸ்ட்சர்ச் நகரில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியாகவே, இலங்கை தேவாலயங்களில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சர் ருவான் விஜேவர்தன செவ்வாயன்று தகவல் தெரிவித்துள்ளார்.  அதேசமயம் இந்த சம்பவத்திற்கு ஐ.எஸ் பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது.   

அதேசமயம் அதிபரின் அறிவுறுத்தலைத் தொடர்ந்து இலங்கை பாதுகாப்புத் துறைச் செயலர் ஹேமசிறீ பெர்னாண்டோ வியாழனன்று தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.

இந்நிலையில் இலங்கை தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தை நிகழ்த்தியதாக சந்தேகிக்கப்படும் 9 பயங்கரவாதிகளின் படங்களை அந்நாட்டு காவல்துறை வெளியிட்டுள்ளது.

இந்த பயங்கரவாதிகளில் மூன்று பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com