Enable Javscript for better performance
இலங்கை வான் எல்லைக்குள் ஆளில்லா விமானங்கள் பறக்க தடை- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    இலங்கை வான் எல்லைக்குள் ஆளில்லா விமானங்கள் பறக்க தடை

    By DIN  |   Published On : 25th April 2019 10:02 AM  |   Last Updated : 25th April 2019 10:02 AM  |  அ+அ அ-  |  

    Unmanned-aerial-vehicle


    இலங்கை வான் எல்லைக்குள் மறுஉத்தரவு வரும் வரை ஆளில்லா விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 

    இலங்கையில் மூன்று தேவாலயங்கள், நட்சத்திர விடுதிகள் உள்பட மொத்தம் 8 இடங்களில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைத் தாக்குதல் மற்றும் குண்டுவெடிப்பில் 10 இந்தியர்கள் உள்பட 359 பேர் உயிரிழந்தனர். 500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 

    இலங்கையில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தவிருப்பதாக, முன்கூட்டியே பாதுகாப்புத் துறை தலைவர்களுக்கு இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் தகவல் அளித்ததாக ஊடகங்களில் தகவல் வெளியானது. இவ்வாறு தகவல் கிடைத்தும், அது குறித்து அதிபர் சிறீசேனாவுக்கும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் அதிகாரிகள் தகவல் தெரிவிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

    இந்நிலையில், கடமையைச் சரியாகச் செய்ய தவறியதற்காக பாதுகாப்புத் துறை உயரதிகாரிகள் பதவி விலக வேண்டும் என்று அதிபர் சிறீசேனா வலியுறுத்தியுள்ளார். 

    இலங்கையில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ள நிலையில், அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக அதிபர் சிறீசேனா தலைமையில் இன்று மாலை அனைத்து கட்சிகள் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என தெரிகிறது. 

    இந்நிலையில், இலங்கை வான் எல்லைக்குள் மறுஉத்தரவு வரும் வரை ஆளில்லா விமானங்கள், ட்ரோன்கள் பறக்க தடை விதித்து உத்தரவிட்டுள்ள இலங்கை விமான போக்குவரத்து துறை.


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp