நாடாளுமன்றத்தில் வருமான வரி கணக்கு: இறுதி கெடுவை நிராகரித்தார் டிரம்ப்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் 6 ஆண்டு கால வருமான வரி கணக்கு அறிக்கையை நாடாளுமன்றக் குழுவிடம் தாக்கல் செய்வதற்காக அளிக்கப்பட்டிருந்த கெடுவை அவர் நிராகரித்தார்.
நாடாளுமன்றத்தில் வருமான வரி கணக்கு: இறுதி கெடுவை நிராகரித்தார் டிரம்ப்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் 6 ஆண்டு கால வருமான வரி கணக்கு அறிக்கையை நாடாளுமன்றக் குழுவிடம் தாக்கல் செய்வதற்காக அளிக்கப்பட்டிருந்த கெடுவை அவர் நிராகரித்தார்.
இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:
அமெரிக்க அதிபர் தேர்தலின்போது தனது வருமான வரி கணக்கை வேட்பாளர்கள் வெளியிட வேண்டும் என்பது அந்த நாட்டுச் சட்டத்தின்படி கட்டாயம் இல்லை.
எனினும், அதிபர் வேட்பாளர்கள் தங்களது வருமான வரி கணக்கை வெளியிடுவது ஒரு மரபாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
எனினும், கடந்த 2016-ஆம் ஆண்டு தேர்தலின்போது குடியரசுக் கட்சி வேட்பாளரான டொனாட் டிரம்ப் இந்த மரபை மீறி, தனது வருமான வரி கணக்கு அறிக்கையை வெளியிடுவதைத் தவிர்த்தார்.
அந்தக் கணக்குகள் அரசின் தணிக்கைக்கு உள்படுத்தப்பட்டுள்ளதால் அவற்றை வெளியிட முடியாது என்று அப்போது அவர் கூறினார்.
இந்த நிலையில், கடந்த 2013-ஆம் ஆண்டு முதல் 2018-ஆம் ஆண்டு வரையிலான 6 ஆண்டுகளுக்கான டிரம்ப்பின் வருமான வரி கணக்கு அறிக்கையை நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமைக்குள் (ஏப். 23) தாக்கல் செய்ய வேண்டும் என்று கட்டணங்கள் மற்றும் வருவாய் விவகாரத்துக்கான நாடாளுமன்ற நிலைக்குழு தலைவர் ரிச்சர்ட் நீல் கெடு விதித்திருந்தார்.
எனினும், குறிப்பிட்ட கெடுவுக்குள் அந்த அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்க்கப்போவதில்லை என்று வெள்ளை மாளிகை துணை செய்தித் தொடர்பாளர் ஹோகன் கிட்லே செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
அரசின் தணிக்கைப் பிரிவு அந்தக் கணக்குகளை தொடர்ந்து தணிக்கை செய்து வருவதால் அந்த அறிக்கை தற்போதைக்கு வெளியிடப்படாது என்று அவர் கூறினார்.
மேலும், டிரம்ப்பின் வரி கணக்கு அறிக்கையை வெளியிட வலியுறுத்துவதன் மூலம், டிரம்ப் தொடர்பான ரகசிய விவரங்களை வெளிப்படுத்த நாடாளுமன்றக் குழு மூலம் ஜனநாயகக் கட்சியினர் முயல்வதாக அவர் குற்றம் சாட்டினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com