இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நில நடுக்கம்: விடப்பட்டது சுனாமி எச்சரிக்கை 

இந்தோனேசியாவில் வெள்ளி மாலை ரிக்டர் அளவுகோலில் 6.8 அளவில் பதிவான சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டதால் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நில நடுக்கம்: விடப்பட்டது சுனாமி எச்சரிக்கை 

ஜகார்தா: இந்தோனேசியாவில் வெள்ளி மாலை ரிக்டர் அளவுகோலில் 6.8 அளவில் பதிவான சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டதால் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இதுகுறித்து அமெரிக்க புவியியல் மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் வெள்ளி மாலை 5 .30 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நில நடுக்கமானது ரிக்டர் அளவுகோளில் 6.8 ஆக பதிவாகியுள்ளது.

தெலுக் பிடங் நகரத்திலிருந்து 227 கிமீ  தூரத்தில் 59 கிலோ மீட்டர் ஆழத்தினை மையமாகக் கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல் இதுவரை  வெளிவராத நிலையில் நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com