
துருக்கியில் வியாழக்கிழமை ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் 23 பேர் காயமடைந்தனர். ரிக்டர் அளவுகோலில் 6 அலகுகளாகப் பதிவான அந்த நிலநடுக்கம், அந்த நாட்டின் டெனிஸ்லி மாகாணம், போஸ்கர்ட் நகரில், உள்ளூர் நேரப்படி மதியம் 2.25 மணிக்கு ஏற்பட்டதாக பேரிடர் மற்றும் அவசரநிலை மேலாண்மை அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள் காரணமாக டெனிஸ்ஸி மாகாணத்தைச் சுற்றிலும் உள்ள சில வீடுகள் இடிந்து விழுந்ததாகவும், இதில் 23 பேர் காயமடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.