சுடச்சுட

  

  லித்தியம், நிக்கல் உற்பத்தியை அதிகரிக்கிறது ஆஸ்திரேலியா

  By DIN  |   Published on : 13th August 2019 12:55 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  linda


  மின்னணு சாதனங்களில் பயன்படும் லித்தியம், கோபால்ட், நிக்கல் மற்றும் அரிய தனிமங்களின் உற்பத்தியை அதிகரிக்க உள்ளதாக ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது.
  நிக்கல், கோபால்ட், லித்தியம், கிராஃபைட் போன்ற தனிமங்கள் அறிதிறன் பேசி, லேசர்கள், மின்னணு சாதனங்கள் உள்ளிட்டவற்றின் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகின்றன. டிஸ்புரோசியம் போன்ற அரிய தனிமங்களும் இதில் பயன்படுத்தப்படுகின்றன. இத்தனிமங்களை சீனாவே அதிக அளவில் உற்பத்தி செய்து வருகிறது.
  இருந்தபோதிலும், இத்தனிமங்களை சீனா ஏற்றுமதி செய்வது குறைய வாய்ப்பிருப்பதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து, இத்தனிமங்களின் உற்பத்தியை அதிகரிக்க இருப்பதாக ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, அந்நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சர் லிண்டா ரெனால்ட்ஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நாட்டின் எல்லைக்குள்பட்ட பரப்பில் அரிய தனிமங்கள் அதிகளவில் உள்ளன. அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நட்பு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும்பொருட்டு அத்தனிமங்களின் உற்பத்தியை அதிகரிக்க உள்ளோம். லித்தியம், கோபால்ட், நிக்கல் போன்ற தனிமங்கள் நாட்டில் 40 சதவீதம் உள்ளன. பாதுகாப்பு சாதனங்கள் மற்றும் தொழில்நுட்ப சாதனங்களின் உற்பத்தியில் இத்தனிமங்கள் அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றன  என்றார் லிண்டா ரெனால்ட்ஸ்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai