கெளதமாலா அதிபராக கியாமடேய் தேர்வு

மத்திய அமெரிக்க நாடான கெளதமாலாவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் அலெஜாண்ட்ரோ கியாமடேய் வெற்றி பெற்றார்.
கெளதமாலா அதிபராக கியாமடேய் தேர்வு


மத்திய அமெரிக்க நாடான கெளதமாலாவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் அலெஜாண்ட்ரோ கியாமடேய் வெற்றி பெற்றார்.
கெளதமாலா அதிபர் ஜிம்மி மொரால்ஸின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஜனவரியோடு முடிவடைய உள்ள நிலையில், அடுத்த அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகளை எண்ணும் பணிகளை அந்நாட்டுத் தேர்தல் ஆணைய அதிகாரிகள் திங்கள்கிழமை மேற்கொண்டனர். இதில், முன்னாள் அதிபர் அல்வாரோ கொலம்மின் மனைவி சாண்ட்ரா டாரஸை தோற்கடித்து, கியாமடேய் வெற்றி பெற்றார்.
கியாமடேய்க்கு 58.5 சதவீத வாக்குகள் கிடைத்ததாகத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. தற்போதைய அதிபர் மொரால்ஸ், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புடன் மேற்கொண்ட அகதிகள் ஒப்பந்தம் கெளதமாலா மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த விவகாரத்தில் புதிய அதிபர் கியாமடேய் என்ன முடிவெடுக்கப் போகிறார் என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்தன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com