ஹாங்காங் விமான நிலையத்தை முற்றுகையிட்ட போராட்டக்காரர்கள்: விமான சேவை நிறுத்தம்

ஹாங்காங் விமான நிலையத்தை ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் திங்கள்கிழமை முற்றுகையிட்டதையடுத்து விமான சேவை முற்றிலும்
ஹாங்காங் விமான நிலையத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்ட போராட்டக்காரர்கள்.
ஹாங்காங் விமான நிலையத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்ட போராட்டக்காரர்கள்.


ஹாங்காங் விமான நிலையத்தை ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் திங்கள்கிழமை முற்றுகையிட்டதையடுத்து விமான சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டது.
ஹாங்காங்கில் ஜனநாயகத்தை வலுப்படுத்த கோரியும், முந்தைய ஆர்ப்பாட்டங்களில் போலீஸாரின் வன்முறையை கண்டித்தும் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஹாங்காங் விமான நிலையத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டனர். 
சுமார் 5,000-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட அந்த ஆர்ப்பாட்டத்தில் போலீஸாரின் வன்முறைகளை கண்டிக்கும் வகையில் கையில் பதாகைகளை ஏந்தியிருந்தனர். 
போலீஸாரின் செயல்பாடு தீவிரவாத செயலுக்கு ஒப்பாக உள்ளது என்று அவர்கள் முழக்கமிட்டனர்.
இதுகுறித்து ஹாங்காங் விமான நிலைய ஆணையம் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
கடந்த மூன்று நாள்கள் தொடர் போராட்டம் நடைபெற்று வந்தாலும், திங்கள்கிழமை நடைபெற்ற போராட்டம் மிகவும் குழப்பமான ஒரு சூழ்நிலையை உருவாக்கியது. இதனால், ஹாங்காங் சர்வதேச விமான நிலையத்தின் சேவைகள் மிகவும் பாதிப்புக்குள்ளாகின. சோதனை நடைமுறைகள் முழுமையாக நடந்து முடிந்து புறப்படும் விமானங்களைத் தவிர்த்து ஏனைய  விமானங்களின் வருகை மற்றும் புறப்பாடு அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. 
விமான நிலையத்தின் கார் நிறுத்தும் பகுதிகள் உள்ளிட்ட அனைத்தையும் போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டு நெருக்கடி நிலையை ஏற்படுத்தினர். எனவே, விமானப் பயணிகள் எவரும் விமான நிலையத்துக்கு வரவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டது என்று விமான நிலைய ஆணைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
ஹாங்காங்கில் கைது செய்யப்பட்டவர்களை சீனாவுக்கு நாடு கடத்த வகை செய்யும் சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தொடங்கிய போராட்டங்கள், அந்த மசோதா காலாவதி ஆன பிறகும் 10 வாரங்களுக்கும் மேலாக தொடர்ந்து நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com