சுடச்சுட

  
  taiwan


  தைவான் அதிபர் மாளிகையில் விருந்தினராகத் தங்கியிருக்க, சுற்றுலாப் பயணிகளுக்கு அந்த நாட்டு அதிபர் சாய் இங்வென் அழைப்பு விடுத்துள்ளார்.
  தைவானுக்கு தங்கள் நாட்டு மக்கள் தனி நபர்களாக சுற்றுலா செல்ல சீனா அனுமதி மறுத்துள்ளதையடுத்து, சரிந்து வரும் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
  இதுகுறித்து அதிபர் சாய் இங்வென் வெளியிட்டுள்ள விடியோ அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது:
  தைவானுக்கு சுற்றுலா வந்து, இங்குள்ள மக்களின் விருந்தோம்பலை அனுபவிக்கும்படி அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறேன்.
  இங்கு வரும்போது, எனது விருந்தினராக இருந்து, அதிபர் மாளிகையில் நீங்கள் இரவைக் கழிக்கலாம் என்று அந்த அறிக்கையில் இங்வென் அழைப்பு விடுத்துள்ளார்.
  புதிய திட்டத்தின்படி, ஒவ்வொரு நாளும் 20 சர்வதேச சுற்றுலா பயணிகள் அதிபர் மாளிகையில் தங்கவைக்கப்படவுள்ளார்கள்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai