இரு வார ராணுவப் பயிற்சி: பங்கேற்கிறார் துளசி கபார்ட்

அமெரிக்காவின் முதல் ஹிந்து எம்.பி.யும், வரும் அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் தேர்வுக்குப் போட்டியிடுபவர்களில் ஒருவருமான துளசி கபார்ட், இந்தோனேஷியாவில் இரு வாரங்களுக்கு நடைபெறவிருக்கும்
இரு வார ராணுவப் பயிற்சி: பங்கேற்கிறார் துளசி கபார்ட்


அமெரிக்காவின் முதல் ஹிந்து எம்.பி.யும், வரும் அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் தேர்வுக்குப் போட்டியிடுபவர்களில் ஒருவருமான துளசி கபார்ட், இந்தோனேஷியாவில் இரு வாரங்களுக்கு நடைபெறவிருக்கும் ராணுவப் பயிற்சியில் பங்கேற்கவிருப்பதாக அறிவித்துள்ளார்.
அமெரிக்க ராணுவத்தில் பணியாற்றி, மேற்கு ஆசிய நாடுகளின் போர்க் களங்களில் இரு முறை சேவை புரிந்துள்ள துளசி கபார்ட், இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது:
இந்தோனேஷிய வீரர்களுடன் எனது சக அமெரிக்க வீரர்கள் இணைந்து, பயங்கரவாதத் தடுப்பு உள்ளிப்பட்ட பல்வேறு ராணுவப்  பயிற்சிகளை இரு வாரங்களுக்கு மேற்கொள்ளவிருக்கின்றனர். அந்தப் பயிற்சியில் பங்கேற்பதற்க நான் விரும்புகிறேன்.
எனவே, தேர்தல் தொடர்பான பிரசாரப் பணிகளை தற்காலிகமாக நிறுத்திக் கொண்டு இந்தோனேஷியா செல்லவிருக்கிறேன் என்று துளசி கபார்ட் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com