ரஷிய அணுசக்தி ஏவுகணை விபத்திலிருந்து பாடம் கற்கிறோம்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்

ரஷிய அணுசக்தி ஏவுகணை விபத்திலிருந்து நாங்கள் ஏராளமான பாடங்களைக் கற்று வருகிறோம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
ரஷிய அணுசக்தி ஏவுகணை விபத்திலிருந்து பாடம் கற்கிறோம்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்


ரஷிய அணுசக்தி ஏவுகணை விபத்திலிருந்து நாங்கள் ஏராளமான பாடங்களைக் கற்று வருகிறோம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
ரஷியாவின் வட மேற்கே வெண்கடலில் அமைந்துள்ள ராணுவ ஆய்வு மையத்தில் கடந்த வியாழக்கிழமை வெடிவிபத்து ஏற்பட்டது.
இதில் 5 பொறியாளர்கள் உயிரிழந்தனர். இந்த விபத்து காரணமாக அந்தப் பகுதியில் அணுக் கதிர் வீச்சும் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவித்தன.
ரஷியா ரகசியமாக உருவாக்கி வரும் ஸ்கைஃபால் என்ற அணுசக்தியில் இயங்கக் கூடிய ஏவுகணையை சோதித்தபோது இந்த விபத்து ஏற்பட்டதாக பாதுகாப்பு நிபுணர்கள் தெரிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து, வியாழக்கிழமை விபத்தைச் சந்தித்த ஏவுகணைத் திட்டம் அணுசக்தி தொடர்புடையது என ரஷியாவும் ஒப்புக் கொண்டது.
இந்த நிலையில் அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளியிட்டுள்ள சுட்டுரை (டுவிட்டர்) பதிவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
ரஷியாவின் அணுசக்தி ஏவுகணை சோதனை தோல்வியடைந்து, அது வெடித்துச் சிதறியதிலிருந்து அமெரிக்கா ஏராளமான பாடங்களைக் கற்று வருகிறது.
அமெரிக்காவிடமும் இதே போன்ற தொழில்நுட்பம் உள்ளது. அனால், அது ரஷியர்களுடையதைவிட மிகவும் மேம்பட்டது.
ரஷியாவின் ஸ்கைஃபால் வெடித்துச் சிதறியதால் ஏற்பட்ட அணுக்கதிர் வீச்சு குறித்து, அந்த சோதனை மையத்தை சுற்றியுள்ள மக்கள் கவலையடைந்துள்ளனர். இது மிகவும் வருத்தத்துக்குரிய நிலையாகும் என்று தனது சுட்டுரைப் பதிவுகளில் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், டிரம்ப் குறிப்பிட்டது போல தங்களிடம் அணுசக்தியில் இயங்கும் ஏவுகணைத் தொழில்நுட்பம் இல்லை என்று அமெரிக்க ராணுவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். 1960-களில் அந்த தொழில்நுட்பத்தை உருவாக்க அமெரிக்கா முயன்றாலும், அது நடைமுறைக்கு சாத்தியமில்லாததும், அதிக கொடூரமானதுமாக இருந்ததால் அந்த திட்டம் கைவிடப்பட்டதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com