சுடச்சுட

  

  ஆளுயர பென்குவின் எலும்புக்கூடு நியூஸிலாந்தில் கண்டுபிடிப்பு

  By DIN  |   Published on : 15th August 2019 01:04 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  penguin

  ஆளுயுர பென்குவின் குறித்த ஓவியரின் கற்பனை.


  மனிதரைப் போன்ற உயரம் கொண்ட பென்குவின் பறவையின் எலும்புக் கூடு நியூஸிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
  இதுகுறித்து அந்த நாட்டு விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளதாவது:
  பழங்காலத்து உயிரினங்களின் புதைபடிமங்களை சேகரிக்கும் தன்னார்வலர் ஒருவர், அண்மையில் பென்குவின் பறவையின் கால் எலும்புப் படிமங்களை  கண்டறிந்தார்.
  அந்தப் படிமங்களை ஆய்வு செய்ததில், அவை பல கோடி ஆண்டுகளுக்கு முன்னர் அழிந்து போன, இதுவரை அறியப்படாத பென்குவின் இனத்தைச் சேர்ந்தவை என்பது தெரிய வந்தது. அந்த இனம் அழிந்து 5.6 கோடி ஆண்டுகளிலிருந்து 6.6 கோடி ஆண்டுகள் வரை ஆகியிருக்கலாம்.
  அவற்றின் உயரம் 1.6 மீட்டராகவும் (5.25 அடி), எடை 80 கிலோவாகவும் இருந்திருக்கும் என்று ஆய்வில் தெரிய வந்தது. இது, ஏறத்தாழ சராசரி மனிதனின் எடை மற்றும் உயரம் ஆகும்.
  அந்தப் பறவையின் எடை, தற்கால பென்குவின்களைப் போல 4 மடங்காகவும், உயரம்  1.3 அடி அதிகமாகவும் இருந்துள்ளது.
  கடல் நாய் (சீல்), சுறாக்கள் போன்ற வேட்டை மிருகங்களின் வருகையால் அந்த பென்குவின் இனம் அழிந்திருக்கலாம்.
  இந்தப்  பகுதியில் பிரம்மாண்ட பென்குவின்கள் வாழ்ந்திருக்கலாம் என்று விஞ்ஞானிகள் ஏற்கெனவே ஊகித்திருந்ததை இந்த கண்டுபிடிப்பு மெய்ப்பித்துள்ளது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.


   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai