சுடச்சுட

  

  உலக வர்த்தக அமைப்பின் சலுகைகளை இந்தியா, சீனா பெறுவதை ஏற்க முடியாது: அதிபர் டிரம்ப்

  By DIN  |   Published on : 15th August 2019 02:37 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  trum

  அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பேச மேடைக்கு வந்த அதிபர் டிரம்ப்.

  இந்தியா, சீனா இனி வளரும் நாடுகள் இல்லை; உலக வர்த்தக அமைப்பின் சலுகைகள் இனி அவற்றுக்கு கிடைப்பதை அனுமதிக்க மாட்டோம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். 
  அமெரிக்க சீனா இடையே வர்த்தக மோதல் எழுந்துள்ளது. இரு நாடுகளும் பரஸ்பரம் இறக்குமதி வரிகளை அதிகரித்துள்ளன. அதேபோல், அமெரிக்க இறக்குமதி பொருள்கள் மீது இந்தியா அதிக வரி விதிப்பதாகவும் அமெரிக்கா விமர்சித்து வருகிறது. இந்நிலையில், அதிபர் டிரம்ப் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். 
  அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் நடைபெற்ற கூட்டத்தில் அதிபர் டிரம்ப் பேசியதாவது: 
  ஆசிய கண்டத்திலுள்ள மிகப்பெரிய இரு பொருளாதாரங்களான இந்தியாவும், சீனாவும், இன்னும் வளரும் நாடுகள் என்று உலக வர்த்தக அமைப்பு எண்ணுகிறது. உண்மையில் அந்த நாடுகள் வளர்ந்துவிட்டன.  அதனால் உலக வர்த்தக அமைப்பின் சலுகைகளை இனியும் அவை பெற இயலாது. 
  இருப்பினும் அந்த நாடுகள் உலக வர்த்தக அமைப்பிடம் இருந்து பலன்களை அனுபவித்து வருகின்றன. இது அமெரிக்காவுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. இந்தியாவும், சீனாவும் பல ஆண்டுகளாக அமெரிக்காவை விட அதிக பலன்களை பெற்று வருகின்றன. உலக வர்த்தக அமைப்பானது, அமெரிக்காவையும் நியாயமான முறையில் நடத்தும் என்று நம்புகிறேன். 
  இந்தியாவும், சீனாவும் இனியும் உலக வர்த்தக அமைப்பிடம் இருந்து சலுகைகள் பெறுவதை அனுமதிக்க மாட்டோம் என்று டிரம்ப் பேசினார். 
  உலக வர்த்தக அமைப்பின் விதிகளை தனக்கு சாதகமாக பயன்படுத்தி அந்த அமைப்பிடம் இருந்து சலுகைகள் பெறும் வளர்ந்த நாடுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கான அதிகாரத்தை அமெரிக்க வர்த்தக அமைப்புக்கு (யுஎஸ்டிஆர்) டிரம்ப் அதிகாரமளித்துள்ளதாக அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
  முன்னதாக, எந்த அடிப்படையில் ஒரு நாட்டுக்கு வளரும் நாடு என்ற அந்தஸ்து வழங்கப்படுகிறது என்பதை உலக வர்த்தக அமைப்பு விளக்க வேண்டும் என்று அதிபர் டிரம்ப் வலியுறுத்தியிருந்தார். உலக வர்த்தக அமைப்பு விதிகளின் கீழ் பல்வேறு வர்த்தக சலுகைகளை அனுபவித்து வரும் இந்தியா, சீனா, துருக்கி போன்ற நாடுகளுக்கு எதிரான அமெரிக்காவின் நடவடிக்கையாகவே இது பார்க்கப்படுகிறது.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai