சுடச்சுட

  
  pakistan


  பாகிஸ்தானில் பெய்து வரும் கனமழை காரணமாக, அந்த நாட்டின் மிகப் பெரிய நகரான கராச்சியில் 42 பேர் உயிரிழந்தனர்.
  இதுகுறித்து அதிகாரிகள் தெரிவித்ததாவது: பாகிஸ்தானில் பருவமழைக் காலம் கடந்த ஜூலை மாத இறுதி வாரத்தில் தொடங்கியது.
  இந்த நிலையில், கராச்சி நகரில் கடந்த சனிக்கிழமை முதல் கனமழை பெய்து வருகிறது.
  இந்த மழையால் ஏற்பட்ட விபத்துகளில் 24 பேர் உயிரிழந்தனர். கராச்சி நகரம் அமைந்துள்ள சிந்து மாகாணத்தில் ஒட்டுமொத்தமாக 28 பேர் உயிரிழந்தனர். இத்துடன், இந்த பருவமழைக் காலத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42-ஆக உயர்ந்துள்ளது.
  இவர்களில் பலர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர். அந்த விபத்துகளுக்கு கராச்சி மின் வாரியம்தான் பொறுப்பேற்க வேண்டும். எனவே, மின்சாரம் தாக்கி உயிரிழந்தவர்கள் சார்பாக கராச்சி மேயர் அலுவலகம் காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai