ஏழை குடியேற்றவாசிகள் குறித்த டிரம்ப் கொள்கையால் சர்ச்சை

அரசின் சலுகைகளைப் பெறும் ஏழை குடியேற்றவாசிகளுக்கு நிரந்தர குடியுரிமையை மறுக்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் புதிய
மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவிலிருந்து அடைக்கலம் தேடி அமெரிக்கா வந்த குடும்பம் (கோப்புப் படம்).
மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவிலிருந்து அடைக்கலம் தேடி அமெரிக்கா வந்த குடும்பம் (கோப்புப் படம்).


அரசின் சலுகைகளைப் பெறும் ஏழை குடியேற்றவாசிகளுக்கு நிரந்தர குடியுரிமையை மறுக்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் புதிய கொள்கை, எதிர்க்கட்சியினர் மற்றும் அகதிகள் நல ஆர்வலர்களிடையே கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:
மருத்துவ உதவித் திட்டம், இலவச உணவுத் திட்டம், வீட்டு வசதித் திட்டம் உள்ளிட்ட அரசின் பல்வேறு நலத் திட்டங்களால் பலனடைந்து வரும் குடியேற்றவாசிகளுக்கு, அமெரிக்காவில் நிரந்தரமாகத் தங்கியிருப்பதற்கு உரிமை அளிக்கும் கிரீன் கார்டு வழங்குவதை தடை செய்யப்போவதாக அதிபர் டிரம்ப் அண்மையில் அறிவித்தார்.
இதனை, எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியினரும், குடியேற்றவாசிகளின் உரிமைகளுக்காகப் போராடி வரும் அமைப்பினரும் கடுமையாகக் கண்டித்து வருகின்றனர்.
இந்த நிலையில், தமது சொந்தக் காலில் நின்று அமெரிக்காவின் வளர்ச்சிக்கு பங்களிப்பவர்களுக்கு மட்டுமே நிரந்தர குடியுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று டிரம்ப்பின் உதவியாளர் கென் குக்கினெலி செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்றப் பிரிவின் தற்காலிக இயக்குநராகப் பொறுப்பு வகிக்கும் அவர், குடியேற்றவாசிகளை வரவேற்று சுதந்திர தேவி சிலையில் பொறிக்கப்பட்டுள்ள வாசகம், ஐரோப்பியர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்று குறிப்பிட்டார்.
அவரது கருத்து, இந்த விவகாரத்தில் சர்ச்சையை மேலும் அதிகப்படுத்தியுள்ளது.
இதுகுறித்து, வரும் அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் தேர்வுக்குப் போட்டியிடுபவர்களில் ஒருவரான டெக்ஸாஸ் எம்.பி. பெடோ ஓரூர்கே கூறுகையில், அமெரிக்காவின் சுதந்திர தேவி சிலை வெள்ளை இனத்தவருக்கு மட்டுமே உரித்தானது என்ற டிரம்ப் அரசின் கொள்கை ஏற்கெனவே தெளிவாகத் தெரிந்த ஒன்றுதான். அதனை கென் குக்கினெலி தற்போது உறுதிப்படுத்தியுள்ளார் என்று சாடியுள்ளார்.
ஏற்கெனவே, ஆப்பிரிக்க நாடுகளை தகாத வார்த்தைகளால் டிரம்ப் விமர்சித்ததாக சர்ச்சை எழுந்த நிலையில், அரசு உதவி பெறும் குடியேற்றவாசிகளுக்கு எதிராக டிரம்ப் வெளியிட்டுள்ள அறிவிப்பு, கருப்பினத்தவர் மற்றும் வெள்ளையர் அல்லாத பிற இனத்தவருக்கு எதிராக அமைந்துள்ளதாகக் குற்றம் சாட்டப்படுகிறது. ஏற்கெனவே, 2016-ஆம் ஆண்டில் அதிபர் தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கியபோது, மெக்ஸிகோவிலிருந்து அமெரிக்காவில் குடியேறியவர்கள் குற்றச் செயல்களை மேற்கொள்பவர்கள் என்று டிரம்ப் சாடினார்.
இந்த நிலையில், வரும் 2020-ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் அதிபர் தேர்தலில் தனது ஆதரவாளர்களின் வாக்குகளைக் கவர்வதற்காகவே இத்தகைய அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளதாகக் கருதப்படுகிறது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com