பூடான் ராயல் பல்கலை.யில் பிரதமர் மோடி உரை

பூடானின் திம்புவில் அமைந்துள்ள ராயல் பல்கலைக்கழகத்தில் பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை உரையாற்றியனார்.
பூடான் ராயல் பல்கலை.யில் பிரதமர் மோடி உரை

இந்தியா-பூடான் இடையே விண்வெளி ஆராய்ச்சி, விமானப் போக்குவரத்து, தகவல் தொழில்நுட்பம், எரிசக்தி உள்ளிட்ட துறைகளில் 10 முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் சனிக்கிழமை கையெழுத்தாகின. பூடானில் அந்நாட்டுப் பிரதமர் லோதே ஷேரிங்- பிரதமர் நரேந்திர மோடி இடையேயான பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

இதையடுத்து பூடானின் திம்புவில் அமைந்துள்ள ராயல் பல்கலைக்கழகத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றியதாவது:

பூடான் வருபவர்கள் அனைவரும் இந்த அழிகய சூழல்களையும், எளிமையான மனிதர்களையும் கண்டு நிச்சயம் வியப்படைவார்கள். இந்தியர்களுக்கும், பூடான் மக்களுக்கும் இயற்கையாகவே நல்லுணர்வு உண்டு. ஏனென்றால் பூகோள அடிப்படையில் அவ்வாறு அமைந்துள்ளது. நமது நாடுகளின் பண்பாடு, பாரம்பரியம், கலாச்சாரம் உள்ளிட்டவைகளுக்கு இடையிலும் சிறந்த ஒற்றுமை உள்ளது.

மிகப்பெரிய சுகாதார அமைப்பு கொண்ட நாடாக இந்தியா திகழ்கிறது. ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் மூலம் 500 மில்லியன் இந்தியர்களின் மருத்துவ தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. மேலும் உலகிலேயே மிகவும் எளிமையாக தொடர்புகொள்ளும் நாடாகவும் இந்தியா விளங்குகிறது. இது நாட்டின் பல லட்சம் பேருக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வளர்ச்சியை ஏற்படுத்துகிறது.

எக்ஸாம் வாரியர்ஸ் என்ற எனது புத்தகத்தின் பெரும் பகுதி புத்தரால் ஈர்க்கப்பட்டு எழுதப்பட்டு தான். குறிப்பாக நேர்மறைத்தன்மை, பயத்தில் இருந்து மீண்டு வருவது, தனிமையில் படும் துயரங்களில் இருந்து மீள்வது, இயற்கையுடன் இணைந்து வாழ்வது என பலவற்றை குறிப்பிடலாம்.

இருநாடுகளுக்கு இடையிலான நல்லுணர்வு தொடர வேண்டும் என்பதை பூடான் புரிந்துகொண்டுள்ளது. சாலை முழுவதும் சிறுவர்கள் என்னை வரவேற்றத்தை என்றும் மறக்க முடியாது. புன்னகையுடன் கூடிய தூய மனது அந்த சிறுவர்களின் முகங்களில் வெளிப்பட்டது.

பூடானுக்கான சிறிய செயற்கைக்கோள் தயாரிப்புக்காக இங்குள்ள ஆராய்ச்சியாளர்கள் இந்தியா வரவுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. இங்குள்ள பெரும்பாலானவர்கள் விரைவில் உலகின் மிகச் சிறந்த ஆராய்ச்சியாளர்களாகவும், பொறியாளர்களாகவும், புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்குபவர்களாகவும் வளர்வீர்கள் என நம்புகிறேன் என்று தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com