பிரதமர் மோடி-பூடான் எதிர்க்கட்சித் தலைவர் சந்திப்பு

பூடான் சென்ற பிரதமர் நரேந்திர மோடி அங்குள்ள எதிர்க்கட்சித் தலைவர் பெமா கியாம்த்ஷோவை ஞாயிற்றுக்கிழமை சந்தித்துப் பேசினார். 
பிரதமர் மோடி-பூடான் எதிர்க்கட்சித் தலைவர் சந்திப்பு   திம்பு, ஆக. 18: பூடான் சென்ற பிரதமர் நரேந்திர மோடி அங்குள்ள எதிர்க்கட்சித் தலைவர் பெமா கியாம்த்ஷோவை ஞாயிற்றுக்கிழமை சந்தித்துப் பேசினார்.  அவர்களத
பிரதமர் மோடி-பூடான் எதிர்க்கட்சித் தலைவர் சந்திப்பு திம்பு, ஆக. 18: பூடான் சென்ற பிரதமர் நரேந்திர மோடி அங்குள்ள எதிர்க்கட்சித் தலைவர் பெமா கியாம்த்ஷோவை ஞாயிற்றுக்கிழமை சந்தித்துப் பேசினார். அவர்களத

பூடான் சென்ற பிரதமர் நரேந்திர மோடி அங்குள்ள எதிர்க்கட்சித் தலைவர் பெமா கியாம்த்ஷோவை ஞாயிற்றுக்கிழமை சந்தித்துப் பேசினார். 

அவர்களது சந்திப்பு தொடர்பாக சுட்டுரையில் பதிவிட்ட வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார், "பிரதமர் மோடி, பூடான் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் பெமா கியாம்த்ஷோவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, இந்தியா-பூடான் இடையேயான வலுவான இருதரப்பு உறவுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது' என்று கூறியுள்ளார். 

முன்னதாக, பூடானின் 3-ஆவது அரசரான ஜிக்மே டோர்ஜி வாங்சுக்கின் தேசிய நினைவிடத்துக்கு சென்ற பிரதமர் மோடி, அங்கு அவருக்கு மரியாதை செலுத்தினார். இதுதொடர்பாக பிரதமர் மோடி கூறுகையில், "பூடானின் அமைதி, நல்லிணக்கம், நிலையான வளர்ச்சிக்கு வித்திட்ட அந்நாட்டின் 3-ஆவது அரசர் தேசிய நினைவிடத்தில் மரியாதை செலுத்தினேன்' என்றார். 

மாணவர்களிடையே உரை: பூடான் ராயல் பல்கலைக்கழகத்தின் மாணவர்களிடையே பிரதமர் மோடி உரையாற்றியதாவது: 

இந்தியா-பூடான் மக்களிடையேயான பிணைப்பு இயற்கையான ஒன்றாகும். அது நில அமைப்பை சார்ந்ததல்ல. வரலாறு, கலாசாரம், ஆன்மிக பாரம்பரியம் ஆகியவை இரு நாட்டு மக்களிடையேயும் ஆழமான உறவை ஏற்படுத்தியுள்ளன. துறவிகள், மதகுருக்கள், கல்வியாளர்களும் இந்தியா-பூடான் இடையே சிறப்பான உறவு ஏற்பட காரணமாக இருந்துள்ளனர். 

பாரம்பரியம் தவிர்த்து, பள்ளிகள், விண்வெளி ஆராய்ச்சி, டிஜிட்டல் பரிவர்த்தனை, பேரிடர் மேலாண்மை ஆகிய துறைகளிலும் இந்தியா-பூடான் இடையே ஏற்பட்டிருக்கும் ஒத்துழைப்பானது பூடான் இளைஞர்களுக்கு சாதகமான வாய்ப்புகளை அளிக்கக் கூடியதாகும். இந்தியாவிலுள்ள 130 கோடி மக்களும் உங்களுக்கு உறுதுணையாகவும், உங்களுடன் அறிவை பகிர்ந்துகொள்ளவும் தயாராக இருக்கின்றனர். 

அசாதாரணமான செயல்களை செய்யக் கூடிய ஆற்றலும், திறமையும் பூடான் மாணவர்களிடம் உள்ளது. இது இந்நாட்டு எதிர்கால சந்ததியினரிடையே சாதகமான வாய்ப்புகளை அளிக்கக் கூடியது என்று மோடி குறிப்பிட்டார். 

நாடு திரும்பினார்: தனது இருநாள் பயணத்தை நிறைவு செய்த பிரதமர் மோடி, பூடானில் இருந்து ஞாயிற்றுக்கிழமை இந்தியா திரும்பினார். 

அங்கிருந்து புறப்படும் முன்பாக பிரதமர் மோடி தனது சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், "பூடானுக்கு நன்றிகள். இந்தப் பயணம் நினைவில் நிற்கக் கூடியதாக இருந்தது. அந்நாட்டு மக்கள் என் மீது காட்டிய அன்பு என்றும் மறக்க முடியாதது. பூடானில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றதற்காக பெருமை கொள்கிறேன். இந்தப் பயணத்தின் மூலம் இந்தியா-பூடானின் உறவு மேலும் வலுப்படும்' என்று கூறியிருந்தார். 

2-ஆவது முறையாக பிரதமராகப் பதவியேற்ற பிறகு நரேந்திர மோடி பூடான் சென்றது இது முதல் முறையாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com