சுடச்சுட

  
  china

  வென்சுவான் மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவால் சேதமடைந்த வீடு.

  சீனாவின் தென்மேற்குப் பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக 10 பேர் உயிரிழந்தனர்; 27 பேரைக் காணவில்லை. இதுகுறித்து அதிகாரிகள் வியாழக்கிழமை கூறியதாவது:
  சிச்சுவான் மாகாணம், வென்சுவான் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவு போன்ற சம்பவங்களில் 10 பேர் உயிரிழந்தனர்; 27 பேரைக் காணவில்லை.
  நிலச்சரிவில் குடிநீர் இணைப்புக் குழாய்கள் அடித்துச் செல்லப்பட்டதால் 58,000 பேர் குடிநீர் இன்றி தவித்து வருகின்றனர்.
  மேலும், ஆபத்தான பகுதிகளில் சிக்கியுள்ள 1 லட்சத்துக்கும் மேற்பட்டோரை மீட்கும் பணியில் 1,630 மீட்புக் குழுவினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.


   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai