சுடச்சுட

  

  விண்வெளியில் முதல் முறையாக இயந்திர மனிதன்: ரஷியா சாதனை

  By DIN  |   Published on : 23rd August 2019 01:10 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  robo

  விண்வெளிக்கு அனுப்பப்படுவதற்கு முன்னதாக சோதிக்கப்படும் இயந்திர மனிதன் ஃபெடார்.


  விண்வெளிக்கு முதல் முறையாக இயந்திர மனிதனை அனுப்பி ரஷியா சாதனை புரிந்துள்ளது. இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:
  சராசரி மனிதனின் உடல் அளவு கொண்ட இயந்திர மனிதனை ஏற்றிக் கொண்டு, ரஷியாவின் சோயுஸ் எம்எஸ்-14 ராக்கெட் வியாழக்கிழமை விண்ணில் செலுத்தப்பட்டது.
  ஃபெடார் என்று பெயரிடப்பட்டுள்ள அந்த இயந்திர மனிதன்தான், விண்வெளிக்கு ரஷியா அனுப்பும் முதல் இயந்திர மனிதன் ஆகும்.
  சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை வரும் சனிக்கிழமை சென்றடையவிருக்கும் அந்த இயந்திர மனிதன், அங்கு 10 நாள்கள் தங்கியிருந்து அங்குள்ள விஞ்ஞானிகளுக்கு உதவிகள் புரிவதற்கான பயிற்சியை மேற்கொள்ளும். பொதுவாக சோயுஸ் ராக்கெட்டுகளில் மனிதர்கள்தான் அனுப்பப்படுவார்கள். எனினும், வியாழக்கிழமை அனுப்பப்பட்ட ராக்கெட்டின் விமானி இருக்கையில் ஃபெடார் அமரவைக்கப்பட்டு விண்ணில் செலுத்தப்பட்டது.
  புதிதாக வடிவமைக்கப்பட்ட அவசரகால வெளியேற்ற கருவியை சோதிப்பதற்காகவும் அந்த ராக்கெட் ஏவப்பட்டதால், அதில் மனிதர்கள் யாரும் அனுப்பப்படவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.


   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai